பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இசையுடன் கூடிய உடற்பயிற்சி முறைகளை இவர் ஆதரித்தார். இசை முழங்கும் பொழுதே, டம்பெல்ஸ் கரளாகட்டைகள், பயிற்சிக் கம்புகள் (Wands) போன்ற வற்றில் பயிற்சி செய்யும் வகைகளை இவர் வற்புறுத்தினார். பயிற்சிகள் அளித்தார். இராணுவ முறை உடற்பயிற்சிகளைப் பள்ளி மாணவ மாணவிகளுக்குக் கற்பிக்கும் செயல்களை இவர் அறவே வெறுத்தார். எனது பயிற்சிகள் கொழுத்த (Fat) நலிந்த (Feelele) ஆண் பெண் அனைவருக்கும் ஏற்றது. இனிய பயன்களை அளித்து, வலிமையளிக்க வல்லது என்று லூயிஸ் கூறினார். இந்த அடிப்படையில் ஆசிரியர்களையும் உருவாக் கினார். நார்மல் இன்ஸ்டிடியூட் ஆப் பிசிகல் எஜுகேஷன் என்ற பயிற்சிப் பள்ளியையும் பாஸ்டன் நகரில் அமைத்துப் பணிகள் ஆற்றினார். 2. 67CGuico off, aftono (Edward Hitch cock) இவரது காலம் 1828-1911 வரை. 50 ஆண்டுகள் பணியாற்றிய இவர், உடற்பயிற்சிகளால், உடல் வளர்கிற அமைப்பை, வருடா வருடம் அளந்து காட்டி, உண்மை நிலையை உறுதிப்படுத்திக் காட்டினார். உடற்கல்வியை விஞ்ஞான பூர்வமாக அமைத்து வளர்க்க வேண்டும் என்ற கொள்கையை வற்புறுத்தியவர் இவர். 3. anodic Gog amorican) (Robert J. Roberts) இவரது வாழ்க்கைக் காலம் 1849 முதல் 1920 வரையாகும். இவர் ஒய்.எம்.சி.ஏயில் உடற்கல்வி இயக்குனரா கவும், ஸ்பிரிங் பீல்டு கல்லூரியில் உடற்கல்வித் துறையில் இரண்டு ஆண்டு ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.