பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 199 உடல் நிமிர்ந்து நிற்க, தோரணை பெற (Posture) இடுப்புப் பயிற்சிகள், அடிவயிற்றுப் பயிற்சிகள் வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறினார். கனமான சாதனங்களை வைத்துக் கொண்டு, கஷடமாகப் பயிற்சி செய்யும் முறைகளை இவர் கண்டித்தார். எளிய, இனிய, பாதுகாப்பான, மனதிருப்தி தருகின்ற சுருக்கமான அளவில் உள்ள பயிற்சி முறைகளே மக்களுக்குத் தேவை என்கிற கொள்கையே இவரது ஏற்றமிகு கொள்கையாக இருந்தது. 4. இ.எம்.ஹார்ட்வெல் (E.M. Hart Well) (/850-1922) உடற்கல்வியானது விஞ்ஞானங்களின் அடிப்படையில் விளைந்ததே. உடல் இயக்க நூலுக்கு இணையான கல்வியே உடற்கல்வி என்ற ஆதாரத்தடன், பல அரிய கட்டுரைகளை இவர் எழுதினார். இவரது முயற்சியால் 1889ம் ஆண்டு, உடற்கல்வி பற்றிய கருத்தரங்கம் ஒன்று நடந்தது. அதன் விளைவாக, அமெரிக்கப் பள்ளிகளில், முறையான உடற் கல்வியும், தரமான உடற்பயிற்சி முறைகளும் நடைபெற இக்கருத்தரங்கம் வற்புறுத்தியது. 5. டட்லி ஆலன் சார்ஜன்ட் (Dudley Allen Sargent) 1849 முதல் 1924 வரை வாழ்ந்த இவரது காலத்தில் உடற்கல்வியின் இலட்சியம் பற்றித் தெளிவாக விளக்கினார். நலத்துடன் வாழ, பண்பார்ந்த படிப்பினைகளை வழங்க, பொழுதுபோக்கும் மகிழ்ச்சியையும் அளிக்க உடல்குறைகளை நீக்க, உடற்கல்வி உதவிட வேண்டும் என்ற கொள்கையை வற்புறுத்தினார்.