பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


நடனங்களும் நளினங்களும்

ஜிம்னாஸ் டிக் டான்ஸ் என்பது, பிபாசிஸ் என்று அழைக்கப்பட்டது. அதில், பங்கு பெறுபவர்கள் தரையை உதைத்து, உயரமாக மேலே எழும்பி, அங்கிருந்தபடியே தனது கால்களால் பின்புறமாக உதைத்துக் கொண்டு, பிறகு கீழே வரவேண்டும்.

திருவிழா நடனம் என்பது, ஹார்மஸ் என்று அழைக்கபட்டது. இதில் பங்கு பெறுபவர்கள் தியானா என்ற தெய்வத்தின் முன்னிலையில் இருந்து ஆடி மகிழ்வார்கள்.

அந்த நடனமும், போர் வீரர்கள் போரிடும் பாங்கிலே அமைந்த வெறியூட்டும் இயக்கங்களாகவே இருந்தன.

இராணுவ நடனம் என்பது, பங்கு பெறும் இளைஞர்கள் நிர்வாணமாக இருந்து, கையில் வாளும், கேடயமும் கொண்டு, மற்றவர்களைத் தாக்குவதும், தப்பிப்பதும், போரிடுவதும் போன்ற செயல் நயங்களோடு, சிலிர்க்கும் இசைக்கேற்ப பாவங்களோடு ஆடுகின்ற ஆவேச நடனமாகும்.

                 3. இராணுவ வாழ்க்கை

18 வயது நிரம்பிய பயிற்சி பெற்ற இளைஞர்கள் அனைவரும், இரகசிய இராணுவ அமைப்பில் அங்கத்தினர்களாக சேர்த்துக் கொள்ளப்படுகின்றார்கள். அந்த அமைப்புக்கு கிரிப்டியா (Crypteia) என்பது பெயராகும்.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், அவர்கள் அந்தந்த மாவட்டங்கள் பற்றிய முழுச் செய்திகளையும் விளங்கிக்கொண்டு, திட்டமிட்டு செயல்படும் அளவுக்குத் தேர்ச்சி பெறுகின்றார்கள்.

அதனைத் தொடர்ந்து, இராணுவத் தளவாடங்களையும் ஆயுதங்களையும் வைத்துக் கொண்டு, போரிடும் பயிற்சி