பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 2O1 கல்விக் குழுக்களிலும் இவர் ajīg இருந்தும், ஆசிரியராகப் பணியாற்றியும், உடற் கல்வி சேவை புரிந்திருக்கிறார். கிளார்க் ஹேதரிங்டன் (Clark W. Hetharington) தாமஸ் உட்டுடன் இணைந்து பணியாற்றி, புதிய உடற்கல்விக் கொள்கையை வளர்த்த பெருமை ஹேதரிங் டனுக்கு உண்டு. இவர் 1910ம் ஆண்டு கல்வியின் அடிப்படைப் பண்புகள் எனும் நூலை எழுதி; தனது கருத்துக்களைத் தெளிவாக விளக்கினார். அதில் கல்வியின் முக்கிய நோக்கங்களை நான்கு பகுதிகளாகப் பிரித்துக் காட்டினார். 1. உடற்கல்வியானது உடல் வலிமை மிகு ஆற்றலை (Vigour) வளர்க்க வேண்டும். 2. தசைகளும் நரம்புகளும் இணைந்து சிறப்பாக செயல்படும் ஆற்றலை வளர்க்கவேண்டும். - 3. உடற்கல்வி ஒழுக்கப் பண்புகளை (Character) வளர்க்க வேண்டும். 4. அறிவார்ந்த கல்வியை அளிக்கவேண்டும். இவர் கல்வி மேல் தமக்குள்ள நம்பிக்கையை இப்படி விளக்கினார். கல்வியானது உடலுக்காக, அல்லது மனதுக்காக மட்டுமல்ல: மனித ஆற்றலை மேம்படுத்துவதற்காகவும் விேளேடும். ஆகவே, கல்வி என்பது மனதுக்கு لLDu (9465ے மட்டும் அமையாது. உடலுக்கு, உடல் உறுப்புகள் அனைத்துக்கும் மேன்மைமிகு எழுச்சியை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றார்.