பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O2 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இவர் எழுதிய பள்ளிப் பாடத்திட்டங்களில் உடற்கல்வி என்ற நூல். ஆரம்பப்பள்ளியில் உடற்கல்வி சிறப்பான இடம் பெற உறுதுணையாக அமைந்தது. இயற்கையான உடல் . இயக்க முறையில் உடற்பயிற்சிகள் மாணவ மாணவியர்க்கு அமையவேண்டும் என்னும் கருத்தையே ஹேதரிங்டன் வற்புறுத்தி எழுதினார். லூதர் கல்லிக் (Luther H. Gulick) (/865-/9/8) ஸ்பிரிங்பீல்டு உடற்கல்விக் கல்லூரியில், உடற்கல்வித் துறைத் தலைவராகப் பொறுப்பேற்ற லூதர், பதினோரு ஆண்டுகள் பணிபுரிந்தார். உடற்கல்வியை விஞ்ஞான பூர்வமாக, ஆய்வு நிறைந்த துறையாக, சுகாதார நலம் விளக்கும் கல்வியாக வளர்த்து. உடலமைப்பு உருவாகுதல். அதன் எடை, அளவு, உயரம் இவற்றை அறிதல் (Anthropometry) என்பன போன்ற புதிய உத்திகளை இந்தத் துறையில் இணைத்து, சீரிய வளர்ச்சிக்கு வித்திட்டார். பள்ளியில் கல்லூரிகளில் பயிலும் மாணவர்க்கன்றி, சமுதாயத்தில் உள்ள இளைஞர்கள், பொதுமக்களுக்கு, உடற் பயிற்சிகள் கட்டாயம் வேண்டும். ஆனால் அவற்றில் கடுமையோ, கஷடப்படவோ கூடிய தன்மைகள் இருக்கக் கூடாது என்று கூறி, 5 போட்டி நிகழ்ச்சிகளான பென்டாதலான் (Pentathlon) எனும் நிகழ்ச்சியில் தொடர் போட்டி (League) முறையை இவர் அறிமுகப்படுத்தி வைத்தார். 1890ம் ஆண்டு இதை ஒய்.எம்.சி.ஏ.யில் ஏற்படுத்தி வைத்தார். எல் பிரிங் பீல்டு கல்லூரியை விட்டு நீங்கிய பிறகு, நியூயார்க் நகரப் பள்ளிகளின் உடற்கல்வித் துறை