பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 2O7 o - வேண்டும். என்ற கருத்தினை எல்லா கல்வியாளர்களுமே ஏற்றுக்கொண்டிருந்தனர். இந்தக் கருத்தோட்டமானது, வலிமையான மக்களை வளர்க்கவில்ல்ை தோற்றத்தில் மனிதர்களாக இருந்தார்களே தவிர, ஐரோப்பிய மக்களுடன் இணைத்துப் பார்த்தால், அமெரிக்க இளைஞர்கள் வலிமை குன்றியவர்களாக, வாழ்கிறார்கள் என்பதை, இரண்டாம் உலகப் போர் நடைபெறும்போது தான் அமெரிக்க அரசு தெரிந்து கொண்டது. கைகளில் கால்களில் வலிமையில்லை, உடலுக்கும் போதிய வலுவில்லை என்பதை இராணுவத்திற்கு ஆள்சேர்த்தபோது வந்த இளைஞர்களை மருத்துவ சோதனைசெய்தபோது தான் அரசுக்குப் புரிந்தது. உடற்பயிற்சியுடன், சீருடற்பயிற்சிகளும், ஜிம்னாஸ் டிக்ஸ் பயிற்சிகளும், செம்மையான முறையில் அமைய வேண்டும் என்பதை அரசு புரிந்துகொண்டு, 1956ம் ஆண்டு, ஜெனரல் ஐசன்ஹோவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது, உடல்வலு வளர்க்கும் கழகம் (Physical Fitness Council) 6T6ārugog osotoșăgăl. அவரைத் தொடர்ந்து வந்த ஜனாதிபதிகளும் இம்முறையை மேற்கொண்டு பின்பற்றி, ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்தனர். மக்களை மேன்மைநிலைபெற உதவினர். அதனால், இன்று, அமெரிக்க நாடு விளையாட்டுக்களில் தலைசிறந்து விளங்குகிறது. ஒலிம்பிக் பந்தயங்களில் பெரும் வெற்றிகளைப் பெறுகிறது. விளையாட்டுகளில் விருப்புணர்ச்சி மிகுந்த நாடாக விளங்குகிறது.