பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O8 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா _ இ_ -

11. ஜப்பானில் உடற்கல்வி :

ஆசிய நாடுகளுக்கிடையே, விளையாட்டுக்களிலே ஆர்வம் மிக்க நாடாக மட்டும் இல்லாமல் ஆற்றல் மிக்க நாடாகவே ஜப்பான் ஆதி காலம் முதல் விளங்கி வந்திருக்கிறது. பழைய ஜப்பான் வாழ்க்கை முறை. புதிய ஜப்பான் வாழ்க்கைமுறை என நாம் இங்கே இரண்டாகப் பிரித்துப் பார்த்தாலும், எதோ ஒரு வகையில் மக்கள் எல்லாம் விளையாட்டுக்களிலும், ஏதோ ஒரு வகையில் மக்கள் எல்லாம் விளையாட்டுக்களிலும், உடற்பயிற்சி முறைகளிலும் ஈடுபாட்டுடன் பங்குபெற்று. அவற்றையும் தங்கள் வாழ்வின். ஒரு பகுதியாகவே போற்றி வாழ்ந்திருக்கின்றனர். இதனை பழைய ஜப்பான் வரலாற்றிலே நாம் காண முடிகிறது. பழைய ஜப்பான் (Ancient Japan) வரலாற்றை நாம் படிக்கும்போது, ஆட்சிமுறைகள் எல்லாம் பிரபுக்களுக் கிடையேயுள்ள இராணுவ அதிகாரிகளிடத்திலேயும் தான் தொடர்ந்து வந்திருக்கின்றன. பொதுமக்க்ள் ஆட்சி என்னும் போர்வையில் ஆட்டிப் படைத்து அரசாண்ட பிரபுக்களும் (Nobles) மற்ற ஆட்சியாளர்களும், தங்களுடைய ஆட்சிபீடம் அமரத்துவம் பெற்று தங்களிடமே இருக்கவேண்டும் என்றே விரும்பினர். அதற்காகத் தேவையான தற்காப்பு முறைகளையெல்லாம் கையாண்டனர். போர் வல்லமை மிக் கவர்களாக அவர்கள் விளங்குவதற்காக உடற்பயிற்சிகளில் ஈடுபட்டனர். அந்த உடற் பயிற்சி முறைகளாவன. குதிரைசவாரி, கத்திச்சண்டை,