பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 i டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா /. மேஜி காலத்திற்கு முன்பு (Meiji Era) 1867ம் ஆண்டுக்கு முன்பாக ஜப்பானில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மேஜிகாலத்திற்கு முற்காலம் என்று அழைக்கிறார்கள். இந்தக் காலக் கட்டத்தில், சீனாவில் தோன்றிய சிந்தனையாளர் கன்பூவியஸ் தந்த கொள்கைகள் யாவும், ஜப்பானில் மக்களிடையே நிரந்தரமாகக் குடியேறி, மாபெரும் மலர்ச்சி மிகுந்த மனோபாவத்தை விளைவித்து, வெற்றிக்கொடிநாட்டியிருந்ததென்றே கூறலாம். தனிமனிதவாழ்க்கையில், சமுதாய அமைப்பில் அரசியல் சிந்தனைகளில் கன்பூவியஸ் கொள்கைகள் நிறைய இடம் பெற்றிருந்தன. ஒரே குடும்பம், ஒரே நாடு, ஒரே உலகம் என்ற ஒருமனப் பண்பாட்டை இவரது கொள்கையாவும் தலையாயதாகக் கொண்டிருந்தது. அடுத்தவரிடம் அன்பு செலுத்துதல், அடுத்தவரை மதித்தல், மரியாதை அளித்தல், மன்னித்தல், மற்றவர் குற்றங்களைப் பொறுத்தல் பொறுமை யுடனிருந்தாலும் வீரமானவர்களாக விளங்குதல் என்னும் அவரதுகொள்கைகள். வற்புறுத்தப்பட்டன. அரசும் இவற்றை வழிகாட்டும் கொள்கைகளாக வரவேற்றுப் பின்பற்றியது. நாடுகாக்கும் வீரர்களுக்கும் இராணுவ உடற்பயிற்சிகள் கடுமையாக இருந்தன. அவற்றில் தற்காப்புக் கலைகளாக கத்திச் சண்டை, (Fencing) வில்வித்தை, குதிரை சவாரி, ஈட்டியெறிதல், கத்தி வீச்சு (Sword fight) ஜூடோ போன்றவைகள் இடம்பெற்றிருந்தன. அத்துடன் அவர்களது உடலில், மனதில், உணர்வுகளில் ஒரு சீரான வளர்ச்சியும், தெளிவும், பொலிவும், வலிவும் மிளிர வேண்டும் என்று விரும்பினர்.