பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இதைத் தொடர்ந்து 1891ம் ஆண்டில், பள்ளிகளில் சுகாதாரப் பாடம் சேர்க்கப்பட்டு, மாணவ மாணவியர்க்கு உடல் பரிசோதனைத் திட்டமும் நடத்திட வழிவகைகள் செய்யப்பட்டன. - - 1912ம் ஆண்டுக்குப் பிறகு, ஸ்வீடன் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள் ஜப்பான் நாட்டில் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றுக் கொண்டன. ஓராண்டுக்குள் (1913) விளை யாட்டுக்களும் நடனமும் பள்ளிகளின் பாடத்தில் சேர்க்கப் பட்டன. அதன் பயனாக பள்ளிப் பாடத்திட்டமானது சீருடற்பயிற்சிகள், இராணுவ உடற்பயிற்சி (Drill); விளையாட்டுக்கள், ஸ்வீடன் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள், கத்திச்சண்டை, ஜூடோ போன்றவற்றை தன்னகத்தே கொண்டு, தன்னிகரில்லா பணியைத் தந்தது. நாட்டு மக்களிடையே ஸ்வீடன் ஜிம்னாஸ் டிக்ஸ் பயிற்சிகள் நல்லதொரு இடத்தைப் பிடித்துக் கொண்டன. ஜப்பானியர்கள் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளில் தேறி, அகில உலக அளவில் நடைபெற்றப் போட்டிகளிலும், தெற்கு ஆசியப் போட்டிகளிலும், ஒலிம்பிக் பந்தயங்களிலும் கலந்து கொண்டு சிறப்பான வெற்றிகளைப் பெறவும் துணை புரிந்தன. இத்தகைய நிலையிலிருந்து இன்னும் ஒருபடி மேலே உலாவரும் வகையில், ஜப்பானியக் கல்வியாளர்கள் புதிதாக சிந்திக்கத் தொடங்கினர். முந்தைய உடற்கல்வி முறை உடல் வெப்பத்திற்காக, வலிமைக்காக மட்டுமே உபயோகப்பட்டு வந்ததால், வலிமையான உடலை வளர்த்து, பங்கு பெறுவோருக்கு ஆளுமைப் பண்புகளை (Personality) வளர்த்து விடவும் கூடிய புதுக் கல்விமுறையைக் கொண்டு வந்தனர்.