பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுக்ளில் உடற்கல்வி * 213 - 1936ம் ஆண்டு திருத்தம் பெற்ற புதிய உடற்கல்விப் பாடத்திட்டம் பள்ளிகளுக்குத் தரப்பட்டது. வயதுக்கேற்ப, மாணவர் தரத்திற்கேற்ப விளையாட்டுக்கள், தனித்திறன் போட்டி நிகழ்ச்சிகளைக் கற்றுத் தருகிற பணிக்குப் பச்சைக்கொடி காட்டினர். இந்த இனிய முயற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போதுதான், இரண்டாம் உலகப்போர் நடைபெறக் கூடிய சூழல்கள் நெருங்கிவரத் தொடங்கின. அதனால் மீண்டும், இராணுவ உடற்பயிற்சி முறைக்கும், வலிமையன உடலை மக்கள் பெற வேண்டும் என்ற எழுச்சிக்கும் அரசு முக்கியத்துவம் தரத் தொடங்கியது. இரண்டாம் உலகப் பெரும் போர் நடைபெற்று ஓய்ந்தது. மீண்டும் ஜப்பான் அரசு, தனது நிலையைப் பரிசீலிக்கத் தொடங்கியது. இராணுவ உடற்பயிற்சி முறையை அறவே நீக்கிவிட்டு, விஞ்ஞான பூர்வமான உடற்கல்வியை பள்ளிகளுக்குப் பாடத்திட்டமாகத் தந்தது. பள்ளிகளில் உடற்கல்வி மாணவ மாணவியர்க்கு உடல்திறம் பெருகும் வகையிலே, விளையாட்டுக்கள், ஓடுகளப் போட்டிகளின் நிகழ்ச்சிகள், நடனம் மற்றும் வெளிப்புற பொழுது போக்கு விளையாட்டுக்கள் போன்றவற்றை பள்ளிகளில் நடத்திட அனுமதி அளித்தனர். - - மாணவர்களின் உடல் நலம், ஆளுமைப் பண்புகள், இணைந்து செயல்படும் நரம்புத் தசைகளின் சீரிய செயல்கள் போன்றவற்றை அதிகம் விளைவித்தாக வேண்டும் என்ற வேட்கையுடன், அந்தப் பாடத் திட்டத்தைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் செயல்படுத்தினார்கள். o