பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா s 12. சீனாவில் உடற்கல்வி | சீன தேசம் உடற் கல்வியை சிறப்பானதாக, முக்கியமானதாகக் கருதி, மேன்மையான இடத்தை அளித்து, வெற்றிகரமாக நடத்தி செயல்பட்டு வந்ததாக வரலாறானது விரித்துரைக்கிறது. சீன தேசத்தின் உடற்கல்வி நிலையை நாம் இரண்டு பிரிவாகப் பிரித்துக் காணலாம். . . /. பழங்கால சீனம் பழங்கால சீனத்தின் உடற்கல்வி வரலாறு கி.மு. 2600ம் ஆண்டிலிருந்தே தொடங்கி விடுகிறது. கீழை நாகரிகத்தின் கீர்த்தி மிக்கக் கேந்திரமாக சீனமும் விளங்குவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. சீன தேசத்தின் கல்வி முறையானது, தனிமனித தேக பலத்தை வளர்த்து, கற்கும் கலைகளைத் தெளிவுறக் கற்று சிறப்பெய்தி, அதன் மூலம் நாட்டின் புராதன மரபுகளைப் போற்றிக் காத்துப் பின்பற்றி வருகிற பெருமைமிகு காரியமாற்றுவதாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பண்பாடு, பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை மனம் ஈடுபட்டுக் காத்து வருகிற மக்களை உருவாக்குவதில் சீன அரசினர் சிரத்தை மிகவும் கொண்டிருந்தனர். - சீன தேசத்தின் உடற்பயிற்சி முறைகள் எல்லாம் உடலை வளர்ப்பதுடன், பிணி போக்கும் மருத்துவ முறைப் பயிற்சிகளாகவும் (Medical Exercise) உருவாகி