பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 217 உலாவந்திருக்கின்றன. இதனையே குங்ஃபூ (Kung Fu) என்றும் அழைத்தனர். இந்த குங்ஃபூ பயிற்சியில் ஆழ்ந்த மூச்சிழுத்து விடும் அற்புதப் பயிற்சி முறையுடன், உடலை நீட்டி மடக்கி செய்கின்ற பயிற்சிகளும் அடங்கியிருந்திருக்கின்றன. சூ அரசுக் காலம் (Choo Dynasty) சூ எனும் அரச பரம்பரையினரின் ஆட்சிக் காலம் கி.மு. 1122 முதல் கி.மு. 249 வரை தொடர்ந்து நடந்ததாக சரித்திரம் கூறுகிறது. இந்த ஆட்சிக் காலத்தில் உடற்கல்வி முறை யானது. திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்தக் காலக் கட்டத்தில், நாட்டிலிருந்த பெரும் பான்மையான பள்ளிகளும் கல்லூரிகளும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இயங்கி வந்தன. - ஆரம்பப்பள்ளிகளில் குழந்தைகள் 8 வயதில் சேர்ந்தனர். உயர் பள்ளிகளில் 15 வயதில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களே கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், உடற் கல்விப் பயிற்சிகள் சில கற்பிக்கப்பட்டன. நாட்டின் பண்பாடு மரபுகளை மாணவர்கள் நன்கு கற்றுக் கொள்ளக் கூடியவகையில் அமைந்துள்ள உடற்கல்வி முறைகளையே பெரிதும் பின்பற்றிப் போதித்தனர். = அந்தந்தப் பருவக் காலத்திற்குத் தகுந்தாற் போல உடற்கல்விப் பாட அமைப்புக்களை அமைத்திருந்தனர். குளிர் காலம், மழைக் காலத்தில் நாட்டின் மரபுகளைப் போதிக்கும் வகையில் பயிற்சிகள் அமைந்திருந்தன. வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும், இசை, வில்வித்தை, நடனம் போன்ற கலைகள் கற்பிக்கப்பட்டன.