பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 219 பொதுமக்களிடையே உடற் கல்வியும் சிறப்பிடம் பெற்றிருந்தது. வேட்டையாடுதலும், மீன்பிடித்தலும் பிரபுக்கள் பெருந்தனக்காரர்களின் பொழுது போக்கு அம்சங்களாக விளங்கி வந்தன. நடனம் என்பது மக்களிடையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. வீட்டு வைபவங்களிலும், விமரிசையான விழாக் காலங்களிலும் நடனம் முக்கிய இடம் வகித்து வந்தது. நடனம் நிகழ்ச்சிகளில், அந்த நாட்டுக் கலாச்சாரத்தைக் காத்து, வளர்க்கின்ற முறைகளே அதிகமாக வாங்கியிருந்தன. நான்கு வகை நடன முறைகள் என்று பிரித்துக் காட்டுவார்கள். ஒன்று கேடயம் (Shield) இரண்டு ஈட்டி (Lance) மூன்று புளும் (Plume) (இறகு) நான்கு புளுட் (குழல்) (Flute) இவற்றைக் கைகளில் வைத்துக் கொண்டும் ஏந்திக் கொண்டும் ஆடுகின்ற முறையில், நடனம் தனித் தன்மையுடையதாக விளங்கியது. பட்டம் விடுதல் என்பது தேசிய விளையாட்டாக சீனாவில் இருந்திருக்கிறது. புதிய உடற்கல்விமுறை பழங்காலப் பண்பாட்டினை வளர்க்கும் பெரு முயற்சியிலேயே சீன தேசம் திளைத்திருந்ததால், புதிய முயற்சிகள் எதுவும் மேற் கொள்ளப்படவில்லை என்றே நம்மால் யூகிக்க முடிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அதாவது ஏறத்தாழ எண்பது ஆண்டுகளில், வேறு நாடுகளின் பயிற்சி முறைகள் உட்புகுந்து கொண்டு, உடற்கல்வி அமைப்பையே கொஞ்சம் மாற்றி அமைத்தது என்பதையும் வரலாறு விரிவாகக் கூறுகிறது. அந்தக் காலத்தை 1840 முதல் 1920 என்றும் குறித்துக் காட்டுவார்கள்.