பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இந்த மாறுதல்களுக்குக் காரணமான நாடுகள் என்று இரண்டு நாடுகளைக் கூறலாம். ஒன்று ஜப்பான். இரண்டு அமெரிக்கா நாட்டின் இளம் கிறித்தவக் கழகத்தின் மதவாதிகளின் பணிகள். இந்தக் காலக் கட்டத்தில், ஒரு சில பள்ளிகளில் தான் உடற்கல்விப் பாட முறைகள் இடம் பெற்றிருந்தன. அதுவும் இராணுவ உடற்பயிற்சியும் (Drill) சீருடற் பயிற்சிகளுமே இருந்தன. - அமெரிக்காவிலிருந்து சென்ற கல்வி தத்துவமேதைகள் இருவர் மன்றோ (Manroe) டீ.வே. (Dewey) இவர்களின் மேம்பட்ட முயற்சிகளால், சீனாவின் பழைய கல்வி முறைகள் மாறின. சீன உடற்கல்விப் பாடத்திட்டங்களில், பந்து இடம் பெறும் விளையாட்டுக்கள் அதிகமாக இடம் பெற்றன. நவீன உடற்பயிற்சி செயல்முறைகளும் புகுத்தப்ட்டன. இவர்களின் இணையற்ற உழைப்பு ஈடற்ற முன்னேற்றத்தை அளித்தது. சீனதேசமும் செழிப்பான பாதையில் நடைபோடத் தொடங்கியது. ஆமாம். 1929ம் ஆண்டு தேசிய அரசாக சீனாவில் பொறுப்பேற்றிருந்த அரசு, ஒரு புதுச் சட்டத்தை இயற்றி அரங்கேற்றியது. உடற்கல்விப் பாடம் கட்டாயமாக ஆக்கப்பட்டது. அதனைக் கண்காணித்து செயல்படுத்த, தேசிய உடற்கல் விக் குழு ஒன்றும் அமைக்கபட்டது. தேர்வுகளில் உடற்கல்விப் பாடம் இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில், உடற் கல்வித்துறையில் சீன, தேசம் சிறப்பான முன்னேற்றத்தைப் பெற்றது.