பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி சினாவின் முன்னேற்றம் அரசர்கள் ஆண்ட ஆட்சிக் காலம் மாறி, மக்களால் ஆளப்படும் குடியரசு ஆட்சி அமைந்தபோது, சீனாவில் உடற்கல்வித்துறை சிறப்பான இடத்தைப் பெற்று. சீரான வளர்ச்சியையும் அடைந்தது. to 1948ம் ஆண்டு மக்கள் குடியரசு ஆட்சி மலர்ந்தபோது பீகிங் நகரத்தில், தேசிய விளையாட்டுக் கழகங்கள் மாநாடு ஒன்று நடை பெற்றது. அதுவே ஒலிம்பிக் இயக்கம் ஒன்று. தலை சிறந்த முறையில் உருவாகும் சூழ்நிலையைத் தோற்றுவித்தது. தேசிய பொழுது போக்கு ஓடுகளப் போட்டிக் கழகம் ersurpl Q(Ibăg, și selsoudustou (National Amateuer Athletic Federation) மாற்றி, சீன ஓடுகளப் போட்டிக் கழகம் என்று புதிய பெயரிட்டு, சீன ஒலிம்பிக் கழகம் என்று அமையும் வகையில் புதுப்பித்தனர். 1955ம் ஆண்டு, அகில உலகப் போட்டிகளை பீகிங் நகரில் நடத்தி, ஒரு பெரும் எழுச்சியையே இந்த அமைப்பு ஏற்படுத்தியது. ஒவ்வொரு ஊரிலும்,தாலுகா அளவிலும், முனிசிபாலிடி, மாநிலம் என்ற அளவிலும் கிளைக் கழகங்களைத் தோற்றுவித்து, மக்களிடையே விளையாட்டுக்களைப் பரப்பிட வேண்டும் என்ற முனைப்பினை, இந்தத் தேசியக் கழகம் ஏற்படுத்தித் தந்தது. பெண்கள் நிலை மக்கள் குடியரசு சீன நாட்டில் மலர்ந்த பிறகு பெண்களுக்கு உடற்கல்வியில் பங்கு பெறுகிற வாய்ப்புப் பெருகியது. சீனப்பெண்கள் அவர்களுக்குத் தேவையான