பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி 224 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா உடற்கல்வி மற்றும் பயிற்சிகளை, அவர்களுக்காகவே தனிப்பட்ட முறையில் தயாரித்துக் கொண்டது மட்டுமன்றி, காலை நேரத்தில் உடற் பயிற்சிகள், ஓடுகளப் போட்டி முறைகள் என்றெல்லாம் வகைப்படுத்தி வளர்த்து, வலுவூட்டிக் கொண்டனர். தேசிய அளவில் நடைபெறுகின்ற போட்டிகளில் எல்லோரும் திரளாக வந்து, கலந்து கொண்டு போட்டியிட்டனர். உடற் கல்வித்தறையில் பணிபுரிவதற்காக பெண்கள் ஆசிரியைகளாகப் பயிற்சிகளிலும் ஈடுபட்டுத் தேர்ந்தனர். அதற்காக, பல பயிற்சி நிறுவனங்களும் நிறுவப்பட்டன. இத்தகைய வளர்ச்சியும் தேர்ச்சியும், அவர்களை அகில உலக அளவில் நடந்த மேசைப் பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெறவும், உலகிலே உயர்ந்த நாடாக மிளிரவும் இட்டுச் சென்றது. - தொழிலாளர்களும் விளையாட்டும் தொழிலாளர்கள் விளையாட்டுக்களில் ஈடுபட்டால், உடல் வலிமையும் மனோவலிமையும் பெருகுவதுடன், தொழில் திறனும், நுணுக்கங்களும் பெருகும் என்ற உண்மையை சீனக் குடியரசு தெரிந்து கொண்ட காரணத்தால், அதற்கு முக்கியத்துவம் அளிக்க முற்பட்டது. தொழிலாளர்களுக்கென அமைந்த யூனியன்கள், தங்களது தொழிலாளர்கள் நல் வாழ்வை உயர்த்த விழைந்தன. அதற்காகத் தங்கள் யூனியன்களில், விளையாட்டுக் கழகங்களைத் தோற்றுவித்தன. இப்படி அமையப் பெற்ற தொழிலாளர் விளையாட்டுக் கழகங்களையெல்லாம் தேசிய அளவில் ஒன்று சேர்ந்தனர். அவற்றைக் கட்டுப்படுத்திச் சீராக இயக்க முனைந்தது. சீன