பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஏற்றமிகு நாகரிகத்தில் திளைத்த நாடு எகிப்து என்பதை எல்லா வரலாற்றாசிரியர்களும் ஏகோபித்து ஏற்றுக்கொண்டி ருப்பது உண்மைதான். கி.மு. 6000-ம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, எகிப்தியர் இனிய விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தனர் என்பதைச் சரித்திரக் குறிப்புகள் சாற்றி மகிழ்கின்றன. நைல் நதிதீரத்திலே நலமாக முகிழ்த்தெழுந்த எகிப்து நாகரிகம், எல்லா நாகரிகங்களைப் போலவே, கவின் மிகு கலைகளை, விஞ்ஞானங்களை வளர்த்துக் காட்டியிருக் கின்றது. அறிவு வளர்ச்சியே அருமையான வளர்ச்சியாக அந்நாட்டில் ஆன்ற பெருமை பெற்றிருந்தது. பிரபுக்களும் பெருந்தனக்காரர்களும் நிறையக் கற்றுக்கொள்வதிலும், வாசிப்பதிலும், எழுதுவதிலும் மிக ஆர்வம் கொண்டிருந்தார் கள். ஒரு எழுத்தாளராக (Scribe) வரவேண்டும் என்ற விருப்பத்துடனும் இந்தக் கல்வி கற்பதில் வசதி படைத்த மேட்டுக்குடி மக்கள் கவனம் செலுத்தினார்கள். இதுவே எகிப்துக் கல்விக் கொள்கையாக இருந்தது. ஆனால், உழைப்பாளர்கள், மற்றும் கீழ்க் குடியினர் தங்கள் குழந்தைகளைத் தாங்கள் செய்யும் தொழில்களிலேயே பழக்கினர். அவர்களுக்குக் கல்வியானது எட்டாத கனியாக இருந்தது போலும்.