பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா | 14. இந்தியாவில் உடற்கல்வி எங்கள் முன்னோர்கள் எல்லோரும் கானகத்திலே காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தபோது, உயர்ந்த நாகரிகத்தில் திளைத்த மக்களாக வாழ்ந்தவர்கள் இந்தியர்கள் என்று இந்தியக் கலாசாரத்தின் பெருமையை பேசி வெளிப் படுத்தினார், மோனியர் வில்லியம்ஸ் என்கிற மேல் நாட்டறிஞர். உலகத்திலேயே உயர்ந்த நாகரிகத்தில் உலா வந்த இந்திய நாகரிகம், உடற்கல்வி பற்றிய விவரங்கள் குறித்துத் தெளிவாகத் தெரிவிக்காமற் போனதன் காரணம். இந்தியர்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதி வைத்துவிட்டு போகாத காரணம்தான். எழுதிக் குறிப்பு வைக்கும் பழக்கம் இந்திய சந்ததியினருக்கு இல்லாமற் போனதை தன்னடக்கம் என்பார்கள். தற்குறியான இயல்பு என்றும் கூறுவார்கள். எதுவாக இருந்தாலும், நமது முன்னோர்கள் இந்தியாவின் பழம் பெருமையை நாம் எடுத்துரைக்க இயலாத நிலையில் வைத்து விட்டுப் போய்விட்டார்கள் என்று இன்று நாம் வருந்துவதைத் தவிர, வேறு வழியேயில்லை. வெளிப்படும் வகைகள் நமது கலாச்சாரம், கம்பீரமான நாகரிகப் பண்பாடுகள் பற்றி நம்மால் அறிந்து கொள்ளும் வழிகளாக உதவுவன மரபுகள்: பரம்பரை பரம்பரையாக மக்களிடையே தொடர்ந்து வரும் பழக்கவழக்கங்கள், செவிவழிச் செய்திகள், புராணம்