பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 235 நேராமல் தடுத்துக் காத்திட வேண்டுமென்பதற்காக அழைத்துச் செல்கிறார், அவர்களை விஸ்வாமித்திரர் துயில் எழுப்புவதாக, வால்மீகிக் கவிஞர் இவ்வாறு எழுதியிருக்கிறார். ஓ, இராமா! இதோ பொழுது புலரப் போகிறது. காலை பூஜையைத் தொடங்குகிற காலம் வந்துவிட்டது என்பதாக அழைக்கிறார். அதாவது விடியற் காலைக்கு முன்னதாக வைகறைப் பொழுதுக்கு முன்பாக விழித்தெழுந்து, காலைக் கடன்களை முடித்து, பல்துலக்கி, குளிர்ந்த நீரில் குளித்தெழுந்து, பொழுது புலருவதற்கு முன்னதாகவே பூஜையினை முடித்துவிட வேண்டும் என்பது, புனிதமான பழக்கமாகும். பூஜை என்பது மந்திர சுலோகங்களை மட்டும் சொல்வதல்ல. அத்துடன் பிராணயாமம் போன்ற சுவாசப் பயிற்சிகள்; அங்கங்களைப் பயிற்சிக்குள்ளாக்கும் ஆசன முறைகள், சூரிய நமஸ்காரப் பயிற்சிகள், இப்படிப் பலப் பல முறைகளில் பூஜைகள் நடந்தன. தொடர்ந்தன. ஆக, பூஜையாக இருந்தாலும் அதிலே உடற்பயிற்சிகள் இருந்தன. உணவு, உறையுள் என்பதற்காக முயற்சிகள் எழுந்தாலும், அவற்றிலும் தேகத்திற்குத் தேவையான உடற்பயிற்சிகள் தொடர்ந்தன. இந்தக் காலத்தில் இருந்த அக்காடாஸ் (Akhadas) வியாயம் சாலைகள் (Vyayam Shalas) எல்லாம் நான்கு சுவர்களுக்குள் அடங்கிய பாதுகாப்பான இடங்களிலே பயிற்சிகளைச் செய்ய உதவின. ஆனால், வேத காலத்துப் பயிற்சிகள் எல்லாம் வெட்ட வெளியிலே, திறந்த மைதானப் பகுதிகளிலேதான் நடைபெற்றன. வாயளவிலே போதிக்கின்ற முறைகள் வேத காலத்தில் இல்லை. செய்து பார்க்கின்ற, செயல் வடிவில்தான் உடற்