பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 239 /. வேதகாலத்தில் உடற்கல்வி (கி.மு. 2000 முதல் 1000 வரை) = வேதங்கள் எல்லாம் மதத்தை விளக்க வந்த மதிப்பிற்குரிய சுலோகங்கள் மட்டும் அல்ல, அவைகள் வாழ்க்கையை விளக்கி, வழிகாட்ட வந்த மேன்மைமிகு படைப்புக்களாகும். மத்திய ஆசியா பகுதியிலிருந்து இந்தியாவை நோக்கி நடந்து வந்து, இந்த மக்களிடையே உயர்ந்துபோன ஆசிரியர்களின் வரலாற்றை மட்டும் வேதங்கள் விவரிப்பதுடன் நின்று விடாமல், இந்திய மக்களின் சமூக அமைப்பு, அரசியல் நடைமுறைகள், நாட்டின் நிலவள அமைப்பு, மக்களின் மணியான வாழ்க்கை முறைகள் அனைத்தையும் விளக்கிக் காட்டும் பெட்டகமாகவும் வேதங்கள் விளங்குகின்றன. இந்தியாவில் இருந்த மக்கள் யாவரும் கட்டுடல் கொண்டவர்களாகவும், மிகுந்த பலசாலிகளாகவும் வாழ்ந் திருக்கின்றார்கள். காய்கறிகள், கிழங்குகள், கனிகள், தானிய வகைகள், மற்றும் செடி கொடிகளிலிருந்து கிடைப்பவை யாவும் உணவாக அவர்களுக்கு உதவியிருக்கின்றன. உடலால் அவர்கள் வலிமையானவர்களாக விளங்கிய தாலோ என்னவோ, அவர்கள் உள்ளத்தாலும் வலிமையை உணர்ந்து, ஒற்றுமையாக மற்றவர்களுடன் வாழ விரும்பவில்லை போலும். அதனால், அவர்கள் மற்றவர் களுடன் சண்டை செய்வதிலேயே சமர்த்தர்களாக விளங்கினார்கள். போர்க்களத்தில் இருப்பதையே பூரிப்பாகக் கருதினார்கள். வில் அம்பு வித்தை, குறி பார்த்து எய்தல். குதிரை யேற்றம், சாரட்டுப் போட்டிகள் அவர்களுக்குப் பொது