பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24O - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா _ விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளாக அமைந்திருந்தன. போர்க் கலையை வளர்க்கவும் அப்பயிற்சிகள் உதவியிருக்கின்றன. மேற்கூறிய உடற் கல்வியின் பிரிவுகளாகத் திகழ்ந்த விளையாட்டுக்க்ள எல்லாம் மகிழ்ச்சி தருபவையாக மட்டும் விளங்காமல், வாழ்க்கை முறைகளாகவும், போர் புரிவதற்கேற்ற உதவி சாதனங்களாகவும் உதவியிருக்கின்றன. இந்த வேதகாலத்தின் போதுதான் யோகப் பயிற்சிகள் உருவாகியிருக்கின்றன என்று வரலாறு கருதுகிறது. பிராணாயாமம் என்ற சுவாசப் பயிற்சி முறை, புனிதக் கடமையாகக் கருதப்பட்டிருக்கிறது. பிராணன் + யாமம் எனப்பிரிந்து நிற்கும் இவ்வார்த்தை, பெருமைமிகு சுவாசப் பணியின் இயல்பை ஆழமாக விளக்கிக் காட்டுகிறது. பிராணன் என்றால் காற்று. (ജഖണ്. யாமம் என்றால் கட்டுதல் என்று பொருள். அதாவது, காற்றை நுரையீரலுக்குள் கட்டி வைத்தல் என்பது பொருளாகும். சமஸ்கிருதச் சொல்லாக இதை பிராண+அய்மம் என்பார்கள். பிராணன் என்றால் காற்று. அய்மம் என்றால் நீளமாக என்பது பொருள். நீளமாக அதாவது அதிகமாக சுவாசத்தை உள்ளே இழுத்து அடக்கிப் பிறகு வெளியே விடுதல் என்பது இதன் ஆழ்ந்த பொருளாகிறது. இந்தப் பிராணாயாமப் பயிற்சிகளை நிதமும் செய்து தேர்ச்சி பெற்றதால்தான், யோகிகள் பலர், பற்பல சாதகங்களைச் செய்து, சாதனைகளைப் படைத்திட முடிந்தது. யோகப் பயிற்சிகள் உடலை தூய்மையாகவும் உள்ளத்தை மேலும் தூய்மையாகவும் காப்பாற்றிக் கொள்ள உதவின. யோகாசனப் பயிற்சிகளில் சூரிய நமஸ் காரப்