பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఒ6ు நாடுகளில் உடற்கல்வி 241 பயிற்சிகள் எனும் தலையாயப் பயிற்சி அக்கால மக்களுக்கு ஆற்றலையும் ஆன்ம பலத்தையும் அளித்திருக்கின்றன. 2. புராணகாலத்தில் உடற்கல்வி ( கி.மு. / 000 முதல் 600 வரை) - இதை இதிகாச காலம் என்றும் கூறுவார்கள். இராமாயணம், மகாபாரதம் என்ற இரு இதிகாசங்களும் இந்தக் காலக் கட்டத்தில் தான் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த இதிகாசங்களில், எண்ணற்ற போர்முறை களைப்பற்றி விரிவாகவே எழுதப்பட்டுள்ளன. இவற்றில் அக்கால மக்களிடையே எழுந்துள்ள ஒழுங்கீனங்களும், அவற்றை அழிப்பதற்காக எழுந்த தர்மயுத்தங்கள் பற்றியும் விரிவாக விளக்கி எழுதப்பட்டுள்ளன. இதிகாச காலத்தில் இருந்த கல்விமுறையானது, ஆன்மீக வளர்ச்சியை அதிகரிக்கவும், உடற்கல்வியை மிகுதியாக்கவும் கூடிய முறையிலே கற்பிக்கப்பட்டது. ஆன்மீக வளர்ச்சிக்கு ஜெபதபங்கள், மந்திரங்கள், சுலோகங்கள் உதவியது போல, உடல் வளர்ச்சிக்குப் போராயு தங்கள் உதவின. அவையே உடற்கல்விப் பாடங்களாகவும் அமைந்தன. வில் வித்தை, வேலெறிதல், வாள் சண்டை, கதாயுதங்களில் சண்டை, மல்யுத்தம், குதிரையேற்றம், சாரட்டு வண்டி ஒட்டுதல் போன்றவைகளில் அக்கால மக்கள் அதிகப் பயிற்சிகள் பெற்றிருந்தனர். அவற்றிலே சிறந்த பயிற்சிகளைப் பெற்றிருந்த வீரர்களின் பட்டியல்தான். இதிகாசங்களிலே நிரம்பவும் இடம் பெற்றிருக்கிறது.