பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 245 இருந்தாலும், உடற் கல்வியும் விளையாட்டுக்களும் ஆங்காங்கே இடம் பெற்றிருந்தன. மக்களிடமிருந்து முழுதுமாக, அவை ஒதுங்கிப் போய்விடவில்லை என்பதற்குச் சான்றாக ஒருசில குறிப்புக்கள் கிடைத்திருக்கின்றன. வெளி நாட்டு யாத்ரிகர் மெகஸ்தனிஸ் என்பவர், சந்திரகுப்த மெளரியர் என்ற மன்னர் ஆண்ட காலத்தில், இந்தியா வந்து சேர்ந்த பொழுது, தான் கண்டனவற்றை யெல்லாம் குறிப்புக்களாக எழுதிவைத்துச் சென்றார். அதன் வழியே, நமது நாட்டின் அன்றைய உடற் கல்வியின் உண்மை நிலையை நன்கு அறிந்துகொள்ள முடிகிறது. நாடு காக்கும் போர் வீரர்களுக்கு, போராயுதங்களை எப்படித திறம்படக் கையாளுவது, தேர்ச்சி பெறுவது என்கிற வகையிலே கடுமையான பயிற்சிகள் பலவும் கொடுக்கப் பட்டிருந்தன; பொதுமக்களுக்கோ மகிழ்ச்சியளிக்கும் விளையாட்டுக்கள் போதுமான அளவில் இருந்தன என்பதாக, மெகஸ்தனிஸ் எழுதி வைத்திருக்கும் குறிப்புக்கள் கூறுகின்றன. - மல்யுத்தம், ஒட்டப் போட்டிகள், தாண்டும் போட்டிகள் வேலெறிதல், சாரட்டு ஓட்டப் போட்டிகள், குதிரை ஓட்டப் பந்தயம் போன்ற விளையாட்டுக்கள் பொதுமக்களிடம் போதுமான அளவு இடம்பெற்றிருந்தன என்று அறியும்போது, இராணுவத்தில் சேர்ந்த வீரர்களுக்கு ஆழ்ந்த உடற் பயிற்சியும், பொதுமக்களுக்குத் தேவையான அளவு உடற்பயிற்சியும் அமைந்திருந்தன. அவர்களை உடற் கல்வியானது உற்சாகமாக வாழவும், உடலை வலிமையாகக் காத்துக் கொள்ளவும் உதவியிருக்கிறது என்பதையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. - மகா அசோகர் என்று வரலாறு போற்றுகின்ற அந்த மாமன்னரின் ஆட்சிக் காலத்தில், மிக வலிமை மிக்க