பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS --- --- - - அவர்கள் உக்கிரமத்துடன் முயன்றனர். ஒரு மத்திய தலைமையை அவர்கள் மதிக்கவுமில்லை. ஏற்கவும் இல்லை. அவர்கள் கத்தியும் யுத்தமுமாகக் காலங்கழித்தாலும், கி.பி.13ம் நூற்றாண்டு வரையில், அவர்களின் ஆதிக்கமே இந்தியாவில் தழைத்தோங்கிக் கிடந்தது, தலைதுாக்கி நின்றது. ராஜபுத்திரர்கள் கூடித்திரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது தொழிலே போர் செய்தல் என்பதால், சதாசர்வ காலமும் வீரத்துடன் போர் புரிவதிலேயே அவர்கள் வாழ்நாளைக் கழித்தனர். போரிடும் வல்லமைக்குப் பலமான தேகம் வேண்டுமே அதனால், அவர்கள் கல்வி முறையே உடற்பயிற்சி இராணுவப் பயிற்சி என்பதாகவே அமைந்தது. ராஜபுத்திர சிறுவர்களும் சிறுமிகளும், கத்தி, குறுவாள், நீண்டவாள் இப்படிப்பட்ட ஆயுதங்களை எப்படி சுழற்றுவது. திறமையுடன் கையாளுவது போன்ற பயிற்சிகளிலே பயிற்றுவிக்கப்பட்டனர். அத்துடன் அமையாது, தங்களது தன்மானத்திற்குக் களங்கம் அல்லது குந்தகம் ஏற்படும் என்ற சூழ்நிலை ஏற்படும்போது, தங்களது உயிரை மாய்த்துக் கொண்டு உயிர்த் தியாகம் செய்து கொள்ளவும் கூடிய மன வீரத்தையும் கற்றுத் தேர்ந்தனர். தீயில் குதித்து உயிர்த் தியாகம் செய்வது என்ற மரபு ராஜபுத்திர பெண்களின் வீரமரபாகவே விளங்கியது. ஒரு ஆட்டின் தலையை ஒரேவெட்டில் வீழ்த்திவிடுவது என்பது, ஒரு சிறுவனின் உச்சக்கட்ட வீரத்தையும் வலிமையையும் குறிக்கும் என்பதாக, அவர்கள் வீரப் பயிற்சி முறை அமைந்திருந்தது. அதையே அவர்கள் சிறந்த சகுனம் என்றும் கருதி மகிழ்ந்தனர். -