பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

23



பெண்கள் உடற் கல்வியிலும் உடற் பயிற்சியிலும் ஈடுபடுத்தப்பட்டதன் தலையாய காரணம் - தாய்மார்கள் திறத்துடன் இருந்தால்தான் சேய்களும் திறமாக இருக்கும். எல் பார்ட்டா நாட்டு சமுதாயம் வலிமைமிக்க சமுதாயமாக அமையவேண்டும் என்பது தானே அந்நாட்டு ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பு!

பெண்கள் இவ்வாறு சமுதாயத்தில் கெளரவமான வாழ்க்கை வாழ்ந்தபொழுது, ஆண்கள் அனைவரும் அவரவரது தனிப்பட்ட ஆற்றலால் கெளரவிக்கப்பட்டார்கள். அவ்வப்போது அரசு அதிகாரிகள் ஆடவரின் ஆண்மையை சோதனைகள் மூலம் அறிந்து, அவர்களுக்கு உரிய அந்தஸ்தை வழங்கினார்கள். ஸ்பார்ட்டா நகரத்து ஆண்கள் துன்பத்தை சகித்துக் கொள்ளுதல், கடினமாக உழைத்தல், இராணுவ செயல்களில் சிறந்திருத்தல், எந்த காலத்திலும் தாய் நாட்டுக்குத் தன் உயிரை தந்திடும் அளவுக்குத் தியாக உணர்வுடன் வாழுதல் போன்ற குன்றாக் குணங்களுடைய கொள்கைத் திலகங்களாக வாழ்ந்து சென்றார்கள்.

இறுதியில் ஒரு வார்த்தை

ஸ்பார்ட்டாவைப் பொறுத்த வரையில், இராணுவ நடவடிக்கையே முக்கியமான குறிக்கோளாக இருந்ததால், அந்நாட்டில் கலையும் இலக்கியமும் வளர்ச்சி பெறாமல், வறண்டதொரு தேக்க நிலையை அடைந்தன. ஸ்பார்ட்டா வின் சமுதாயம் குறுகிய நோக்கத்துடன், ஒரு வட்டத்துக்கு உள்ளே வாழ்கின்ற வறட்டுத்தனமான முறைகளுடன் வாழ வேண்டியிருந்தது.

பொதுவாக, ஸ்பார்ட்டா நகரத்து மக்கள் எல்லோருமே அந்த நாட்டின் போர் வீரர்கள்; பணம் பெறாத பணியாளர்கள்; நாட்டில் உலவும் சுதந்தரமான அடிமைகள் என்று வரலாறும்