பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா முகமதியர் காலத்தில் இருந்த விளையாட்டு அமைப்புகள் எல்லாம், வலிமையான தேகத்தை வளர்க்கக் கூடியவைகளாகவே அமைந்திருந்தன என்பது மிகவும் முக்கியமான கருத்தாகும். வேட்டையாடுதல் மிகவும் விரும்பப்படுகிற ஒரு விளையாட்டாக இடம்பெற்றிருந்தது. மல்யுத்தம் அரசால் ஆதரிக்கப்பட்ட கலையாக விளங்கியது. குத்துச்சண்டை; புறாப்பந்தயம், நீச்சல் போட்டிகள், மிருகங்களுக்கிடையே சண்டை போட வைத்தல், துவந்த (இருவர் போடும்) யுத்தங்கள், சதுரங்கம், சோபார் என்ற தாயம் போன்ற ஆட்டம், பாசிசி எனும் தாயக்கட்ட ஆட்டம், எல்லாம் மக்கள் மத்தியிலே பிரபலமானவைகளாக இருந்தன. விளையாட்டுக்களில் மன்னர்களும் விரும்பி விளையாடி மகிழ்ந்திருக்கின்றனர் என்பதற்குப் பல சரித்திரக் குறிப்புக்கள் கிடைத்திருக்கின்றன. சாவோகன் என்ற ஓர் குதிரை மீதேறி ஆடுகிற ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கும் போது, குதுப்புதின் ஐபக் என்ற மன்னர் இறந்து போனார். அந்த விளையாட்டில் அவருக்கு அவ்வளவு ஆர்வம் இருந்தது. கங்கை ஆற்றின் வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டு நீந்துவதில் மன்னர் பாபர் வல்லவராக இருந்தார். ஜஹாங்கீர் காலத்தில், சதுரங்க ஆட்டம் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றிருந்தது. சோபார் என்ற தாயக்கட்டை ஆட்டத்திலும் போலோ என்ற ஆட்டத்திலும் அக்பர் சக்கரவர்த்தி சிறந்த