பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



252

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



படுத்தினார். அவர் முயற்சியால் நூற்றுக் கணக்கான ஜிம்னேஷியங்கள் தோன்றின. அனுமன் பிரதான தெய்வமாக விளங்கினார்.

இந்த ஜிம்னேஷியங்களில் சூரிய நமஸ்காரம் தண்டால் பஸ்கிப் பயிற்சிகள், கனமான கரளா கட்டை சுழற்றல், மல்லர் கம்பப் பயிற்சிகள், மல்யுத்தம், கத்திச் சண்டை முதலியவைகள் கற்றுத்தரப்பட்டன.

அதனால் தான், இந்திய ஜிம்னேஷி இயக்கத்தின் தாத்தா என்று ஸ்ரீ ராமதாஸ் சுவாமிகள் அழைக்கப்படுகிறார்.

பீஷவாக்களாக விளங்கி பலர், உதாரணமாக பாலாஜி பாஜிராவ், தவலேத்ரா சின்கி போன்றவர்கள் அகாடாபோன்ற ஜிம்னேஷியப் பயிற்சிகளில் அதிக ஆர்வம் காட்டிப் பயிற்சிகள் செய்திருக்கின்றனர்.

இந்தியப் பயிற்சிகள் இடமிழந்த காரணம்!

அதிகமான அகாடாக்கள் (ஜிம்னேவியம்) நாட்டில் இருந்தபோதிலும், வந்து ஆர்வத்துடன் பயிற்சி பெறும் மாணவர்கள் தொகை எண்ணிக்கையில் குறைந்திருந்தது.

குருவாக இருந்து இந்த பயிற்சிகளையும், கலைகளையும் கற்றுத் தரும் நிலையில் இருந்தவர்கள், எல்லா மாணவர்களுக்கும் இந்த அரிய கலைகளைத் கற்றுத் தர ஆர்வம் இல்லாதவர்களாக இருந்தனர். தங்களுக்கு வேண்டிய வர்களுக்கு மட்டுமே கற்பிக்கின்ற குரூரக் குணம் கொண்டவர்களாக இருந்தார்கள்.

ஜிம்னேஷியங்களில் பொறுப்புள்ளவர்களாக விளங்கியவர்கள், ஒருவருக்கொருவர் பொறாமை கொண்டு, வம்பு சண்டைகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தனர்.