பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 253 = SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSCSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS து உயர் வகுப்பு மக்களும், வசதிகளில் மற்றும் பிறப்பில் தாழ்ந்த குடியினராகக் கருதப்பட்டவர்களும், இதில் ஆர்வம் காட்டவில்லை. நடுத்தரக் குடியினர் மற்றும் படித்தவர்கள் இதில் ஆர்வம் காட்டினாலும் போதிய உற்சாகத்துடன் கற்றுக்கொள்ள முயலவில்லை. இன்னும் ஏற்பட்ட பல இடர்மிகு சூழ்நிலைகள், இந்திய உடற்கலையை மக்களிடமிருந்து மகிமை இழக்கச் செய்தன. 1. வெளிநாட்டிலிருந்து வந்த உடற்பயிற்சி முறைகள், கவர்ச்சியானவைகளாகவும், காண்பாரை ஆர்வம் கொள்ளச் செய்வனவாகவும் இருந்தன. 2. இந்திய நாட்டுப் பயிற்சிகளைவிட, மேல்நாட்டுப் பயிற்சிகள் அதிகப் பொழுதுபோக்கு அம்சம் கொண்டவை களாக விளங்கின. 3. இந்திய நாட்டுப் பயிற்சிகள் எல்லாம் தனிப்பட்ட ஆட்களின் திறத்திற்கும் நலத்திற்கும் உதவுவது போலவே அமைந்திருந்தன. மேல்நாட்டுப் பயிற்சிகளில் கூட்டு விளையாட்டின் மேல் மக்களை மோகம் கொள்ளச் செய்தன. 4. ஜிம்னேவியங்களும் உடற்பயிற்சிக் கூடங்களும் தனிப்பட்டவர்களின் வசதிக்கேற்ப உதவவில்லை. அவை எளிதாகவும் இல்லை. - இந்திய உடற்கலை முறைகள் ஓய்வடைந்து கொள்ளும் தருணத்தில், ஆங்கிலேயரின் கைகளும் ஓங்கத் தொடங்கிய நேரம் அது. அவர்களின் ஆக்ரமிப்பு எல்லா துறையிலும் இறங்கியது போலவே, உடற்கலைத் துறையிலும் வேரூன்றிக் கொண்டது. மேற்கத்திய நாகரிகத்தை மிகவும் விரும்பிய இந்திய மக்களிடம், அகாடாக்கள் எந்தவிதஈடுபாட்டையும் ஏற்படுத்த இயலாமற் போயிற்று. குமாஸ்தா வேலைக்குக் கொண்டு o