பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 261 செயல்கள் யாவும், இப்பயிற்சிகளில் ஒருவித எரிச்சலையே மாணவர்களிடத்தில் உண்டு பண்ணின. 5. இந்த நேரத்தில் இங்கிலாந்திலிருந்து வந்த கிரிக்கெட், கால்பந்தாட்டம், வளைகோல் பந்தாட்டம். போன்ற விளையாட்டுக்கள் நல்ல பொழுதுபோக்கு அம்சம் கொண்டதாக இருந்ததால், எல்லோருக்கும் அவற்றிலே ஒருவித பற்றும் பாசமும் ஏற்பட்டது. ஆகவே, ஆங்கிலேயர் காலத்தில், இந்திய நாட்டிற்குரிய உடற்பயிற்சிகளின் செய்முறைகளில் வளர்ச்சி குன்றின. மேல் நாட்டு விளையாட்டுக்கள் மக்களிடையே புயலாகப் பரவின. 8. சுதந்திரத்திற்குப் பிறகு (1947க்குப் பிறகு) இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் 1946ம் ஆண்டு, அமராவதி நகரில், அகில இந்திய அளவில் உடற் கல்வி மாநாடு ஒன்று பூரீ சரத்சந்திர போஸ் என்பவர் தலைமையில் நடைபெற்றது. அப்போது, தேசிய உடற்கல்வி மற்றும் @LTQpg|Gussé (55 späth (National Association of Physical Education and Recreation) srsărp și elsoldliu புதிதாகத் தொடங்கப் பெற்றது. ஆங்கிலேயர்களின் அடிமைத் தளையறுத்து விடுதலை பெற்ற இந்தியத் திருநாட்டில், உடற்கல்வியில் வேண்டிய முன்னேற்றங்கள் பல வேகமாகப் பரவிட, விஞ்ஞான பூர்வமான முறைகளில், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இனி, வளர்ச்சி தரும் அமைப்புகளின் திட்டங்களையும், மேற்கொண்ட முயற்சிகளையும் இங்கு தொகுத்துக் காண்போம்.