பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 1. 1948ம் ஆண்டு, மத்திய அரசின் உடற்கல்விக் கமிட்டி ஒன்று (தாராசந்த் கமிட்டி) கூட்டப் பெற்றது. அந்தக் கமிட்டி அளித்த பரிந்துரைகள் ஆக்க பூர்வமான வழிமுறைகளை வகுத்துத் தந்தன. உடற்கல்வியில் பட்டப்படிப்பை அளிக்கும் ஒரு மத்திய பயிற்சிக் கல்லூரி, முதுகலைப் பட்டத்தை ஓராண்டில் பயிற்சி தந்து வழங்கும் நிலை; மற்றும் எல்லா மாநிலங்களிலும், உடற்கல்வி ஆசிரியர்கள் தேவையைத் தீர்த்து வைக்கும் அளவில் உருவாக்கித் தரும் பயிற்சிக் கல்லூரிகளை அமைத்தல் வேண்டும் என்றெல்லாம் தாராசந்த் கமிட்டி பரிந்துரை செய்தது. 2. மத்திய அரசில் சுகாதார அமைச்சராக இருந்த ராஜகுமாரி அம்ரிட் கெளர் என்பவர் 1953ம் ஆண்டில், ஒரு புதிய விளையாட்டுப் பயிற்சித் திட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்கு ராஜகுமாரி விளையாட்டுப் பயிற்சித் திட்டம் என்றே பெயர் சூட்டப்பட்டது. இதுபோலவே, பல்வேறு பயிற்சித் திட்டங்கள் மத்தியக் கல்வித்துறையில் நாடெங்கும் தொடங்கப் பெற்றது. 3. 1954ம் ஆண்டு ஒரு புதிய முறையைக் கொண்டு வந்தது மத்திய அரசு, உடற்கல்வி வளர்ச்சிக்கு அறிவுரை வழங்குவதற்கு ஒரு குழு (Advisory Board) அமைக்கப்பட்டு, நாடெங்கும் நடைபெறுகின்ற உடற்கல்வி மற்றும் ஓய்வு உல்லாச நிகழ்ச்சிகளை (Recreation) ஒருங்கிணைக்கும் தன்மையில் பணியாற்றுமாறு திட்டமிடப்பட்டது. என்றாலும், இந்தக் குழுவானது தொடர்ந்து செயல் படவும் இல்லை. இன்று அந்தக் குழுவும் நடைமுறையில் இல்லாமல் போயிற்று. 4. அகில இந்திய விளையாட்டுக் கழகம்(All India council of Sports) 1954ம் ஆண்டு தொடங்கப் பெற்றது. இந்த