பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 263 அமைப்பானது மத்திய அரசுக்கும் தேசிய விளையாட்டுக் கழகங்களுக்கும் இணைப்புப் பாலமாக இருந்து, வளமாகப் பணியாற்ற உற்சாகம் ஊட்டி உதவியது. அகில இந்திய விளையாட்டுக் கழகத்தின் கிளைக் கழகங்களாக, மாநில விளையாட்டுக் கழகங்கள் தோன்றின. அவற்றிற்குத் துணைபுரியும் கிளைக் கழகங்களாக, மாவட்ட விளையாட்டுக் கழகங்களும் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டன. அகில இந்திய விளையாட்டுக் கழகம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை, புதிய அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு பணியாற்றியது. 5. தேசிய அளவில் தேசியக் கட்டுப்பாட்டுத்திட்டம் (National Discipline Scheme) @6örml, loģ5$luu eļJGT6ð 1954ıb ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இளைஞர்களிடம் கட்டுப் பாட்டையும் ஒழுங்கையும் வளர்க்கும் இலட்சியத்துடன் இந்தத் திட்டம் அமைக்கப்பட்டது. ஒரு சில முக்கிய இடங்களில் பயிற்சி நிலையங்களை அமைத்து அதில் உடற்கல்வியாசிரியர்களுக்கு ஆக்க பூர்வமான பயிற்சிகளை அளிக்க அரசு ஏற்பாடு செய்தது. உடற்பயிற்சிகள், இராணுவ முறை அணிநடை, ஒடுகளப் போட்டிகள், விளையாட்டுக்கள், பாடலுடன் உடற்பயிற்சிகள், சுற்றுலா, கூடாரம் அமைத்துக் குடியேறிக் கற்றல்; கலாச்சார செயல்கள், தேசபற்றுப் பாடல்கள், சமுதாயப் பணிகள் போன்றவற்றில் ஆசிரியர்களுக்கு தேசியக் கட்டுப்பாட்டுக் கழகம் நல்ல பயிற்சிகளை அளித்தது. 1962ம் ஆண்டு சீனா இந்தியாவின் மீது படையெடுத்த போது, நாடெங்கும் உடற்பயிற்சிகள் கட்டாயமாக்கப்