பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா கழகம், சென்னை பல்கலைக் கழகம், பெங்களுர் பல்கலைக் கழகம் (1970, 1971, 1972) யாவும் அடங்கும். 21. தற்போது மத்திய அரசு, கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் தேசிய நற்பணிக் கழகம் (National Service Scheme) எனும் புதிய திட்டத்தைத் தொடங்கி விட்டிருக்கிறது. 22. கிராமப்புறமக்களுக்கும் இளைஞர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபாடு எழவும், பங்குபெற்று வலிமை பெறவும் கூடிய வாய்ப்பினை நல்கும் வகையில், அகில இந்திய கிராமப்புற விளையாட்டுப் போட்டிகள் என்ற அமைப்பினை 1970-71 ம் ஆண்டில் மத்திய அரசு உருவாக்கியது. அதன் முதல் போட்டிகளை, தேசிய விளையாட்டுக் கழகம் (NIS) பாட்டியாலாவில் 1971ம் ஆண்டு நடத்தியது. 23. இந்திய அரசில், முதன் முறையாக, விளையாட்டுத்துறைக்கென்று ஒரு புதிய அமைச்சகம் (Ministry of Sports and Culture) orgy seisoloéðū Quppg). இந்தியாவில் நடைபெற்ற 9வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு (1982) முன்னதாக, இந்த அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது. இதற்குப் பொறுப்பேற்று முதல் விளையாட்டு அமைச்சராக பூட்டாசிங் அமர்த்தப்பட்டார். இந்திய விளையாட்டு ஆணையகம் Sports Authority of India 6T6arp LišlueMolotil 1626trg) உருவாக்கப்பட்டு, இந்தியாவின் பிரதம மந்திரி திருமதி இந்திரா காந்தி அதன் தலைவராக இருந்து வழிநடத்தினார். அகில இந்திய விளையாட்டுக் கழகம் தான், இந்தியாவில் விளையாட்டுத்துறை வளர்ச்சிக் கென்று, ஆய்ந்து தெளிந்து,