பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 269 == _ பல பரிந்துரைகளை அளித்து வந்தது. இந்திய விளையாட்டு ஆணையகம் உருவாக்கப்பட்டபின், அதன் பொறுப்பு முழுவதும் ஆணையகத்திற்கே வந்து விட்டது. - அது போலவே, SNIPES என்ற அமைப்பும் SA என்ற இந்த அமைப்பும் இணைந்து விட்டது. விளையாட்டுத்துறைக்கென்று பொறுப்பேற்று பற்பல வளர்ச்சித் திட்டங்களையும் வழி முறைகளையும் வழங்கி, அகில உலக அரங்கில் இந்தியா வெற்றி நடைபோடச் செய்யும் சீரிய முயற்சிகளையும் இவ்வாணையகம் செயல்படுத்தி வருகிறது. &aagø07 Qayoff (Scouting and Guiding) சாரணப் படை இயக்கத்தின் சரித்திரம் இங்கிலாந்தி லிருந்தே தொடங்குகிறது. இதன் எழுச்சிமிக்க ஆரம்ப கர்த்தாவாக விளங்குபவர் திரு ராபர்ட் பேடன் பவல் (Robert Baden Powell) outrit. இராணுவ அதிகாரியாகப் பணியாற்றிய பவல் அவர்கள், இளைஞர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை உல்லாசமாக ஒருவித லட்சிய நெறியுடனும் கழிக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த இனிய லட்சியத்தை வழிநடத்திக் காட்டவே 1908ம் ஆண்டு, சிறுவர்களுக்காக சாரண இயக்கத்தைத் தொடங்கினார். அவரது சகோதரியும் இந்த இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டு, பெண்களுக்கான சாரண இயக்கத்தைத் தோற்றுவித்து வளர்க்க உதவினார். ஆர்வத்துடனும் அறிவு பூர்வமாகவும் ஆரம்பிக்கப் பட்ட இந்த இயக்கம், அவனியெங்கும் பரவியது. அத்தகைய சூழலில் தான், இந்த இயக்கம் இந்தியாவுக்கும் வந்து குடியேறியது.