பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 271 என்பாரின் சீரிய முயற்சியால், தனித்தனியே பணியாற்றி வந்த சாரணக் கழகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டன. ஒருமைத் தன்மை பெற்று உயர்ந்த அந்த இயக்கத்திற்கு, Lim Ug 5 TTGơUT Quuở, 3th (Bharath Scouts and Guides) என்னும் புதிய பெயர் சூட்டப்பட்டது. சாரண இயக்கத்தின் தனித்தன்மை சாரண இயக்கம் சரித்திரப் புகழ் பெறும் வண்ணம் செழித்தோங்கக் காரணமாக அம்ைந்தவை அதன் அற்புதமாய் அமைந்த அடிப்படைக் கொள்கைகள் தாம். ஒவ்வொரு குடிமகனையும் நாட்டின் உண்மையாக ஒப்பற்றக் குடிமகனாக உருவாக்கும் உயர்ந்த முயற்சியின் வெளிப்பாடுகள் தாம், அதன் கொள்கைகளாக மலர்ந் திருந்தன. 1. சுயக் கட்டுப்பாடு. 2. தன்னம்பிக்கையுடன் தானே செயல்படுதல். 3. சமுதாயப் பணியில் சந்தோஷமாக ஈடுபடுதல். சாரண இயக்கத்தின் உறுதிமொழி சாரண இயக்கத்தில் சேர்கின்ற ஒவ்வொரு சாரணரும் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி, எண்ணுந்தோறும் இன்பம் பயப்பதாகும். கடவுளுக்கும் என் தாய் நாட்டிற்கும், எல்லா சமயத்திலும் எனது சமுதாய மக்களுக்கு நான் எனது அன்றாடக் கடமையை அணுவளவும் தவறாது செய்து வருவேன். சாரண விதிமுறைகளையும் தவறாமல் கடைப் பிடித்து ஒழுகுவேன் என்பதுதான் அந்த உறுதி மொழியாகும்.