பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 277 அந்த எண்ணத்தை செயலாக்க முனைந்தார் அமைச்சர் போன்ஸ்லே. அவரது ஆக்கபூர்வமான திட்டமே தேசிய தற்காப்புத் திட்டம் எனும் பெயரில் 1954ம் ஆண்டு வெளிவந்தது. அதாவது இரண்டாவது மூன்றாவது ஐந்தாண்டுத்திட்டத்தின் கீழ் இத்திட்டம் இடம்பெற்றது. 1957ம் ஆண்டு, இத்திட்டம் மத்திய அரசின் கல்வித் துறையிலும் ஒப்படைக்கப் பெற்று, நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளுக்கும் விரிவாக்கப்பட்டது. தற்காப்புத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள்கள்: 1. மாணவர்களின் தனிப்பட்ட தோரணையை (Personality) வளர்த்து, அண்டை அயலார்களுடன் அனுசரித்துப் போகவும், சமுதாயத்துடன் இணைந்து செயல்பட்டு, தாயகப்பற்றுடன் திறம்பட வாழவும் வழி வகைகளை செய்து தருவது. 2. தாய்நாட்டின் கலை மற்றும் கலாசாரம் பண்பாடு இவற்றினைத் தெள்ளத்தெளிய தெரிந்து கொண்டு, அவற்றில் ஈடுபட்டு, வளர்த்து, தாயகத்தின் தன்னிகரில்லா பெருமையை உயர்த்த உழைக்குமாறு தூண்டிதுணைநிற்பது. 3. இளைஞர்கள் தங்களது உடல் சக்தியின் பெருமையை உணர்ந்து கொண்டு, உடல் நலத்தை உடற்கல்வியின் மூலமாக வளர்த்து வாழ உதவுவது. 4. சுயக்கட்டுப்பாட்டையும் தன்னம்பிக்கையையும் தாங்களே மாணவர்கள் கூடி சேர்ந்து வேலை செய்து வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புக்களை வழங்குவது. -