பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா N.D.S.) போன்றவற்றை பள்ளிகளிடையே புகுத்திப் பார்த்தனர். எல்லாத் திட்டங்களிலும், இயக்க அமைப்பிலும் உடற்கல்வி இருந்ததே தவிர, கணிசமான அளவுக்குக் கட்டாய மாக்கப்படவில்லை. எதிர்பார்த்த அளவுக்கு, உடற்கல்வி துறையில் எந்தவிதமான முன்னேற்றமும் எழவில்லை; ஏற்றம் பெறவில்லை. நிறைய திட்டங்கள் பள்ளிகளில் நுழைக்கப்பட்டதன் காரணமாக, அவற்றை ஆக்கபூர்வமாக நடைமுறைப் படுத்த பள்ளிகள் பெரிதும் முயன்றும், தோல்விகளையே சந்தித்தன. காலவிரயம், அதிகமான பணச்செலவு, வீணான மக்கள் சக்தி, கற்பிக்கும் ஆசிரியர்களுக்கிடையே குழப்பம், இப்படியாகத்தான் திட்டங்கள் சீரழிந்தனவே தவிர, சிறப்பான முன்னேற்றம் எதுவும் சேர்ந்ததாகத் தெரியவில்லை. எனவே, புதிய முயற்சி ஒன்றைப் படைக்க வேண்டும் என்று பேரவா கொண்ட மத்திய அரசு, 1959ம் ஆண்டு, மே மாதம் H.N. குன்ஸுரு அவர்களை தலைவராக நியமித்து, ஓர் ஆய்வு நடத்தி, பரிந்துரைகளைக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டது. குன்ஸ்-ரு அவர்களும், தனது குழுவினருடன் 3 ஆண்டுகள் பல்வேறு பள்ளிகளுக்கும் சென்று, பெரும் பாலோரைச் சந்தித்து பற்பல சூழ்நிலைகளைப் பதமாக அறிந்து தமது கருத்தை வெளியிட்டார். குன்கரு தந்த கருத்துக்கள் 1. பள்ளிகளில் உள்ள பாடத்திட்டங்கள், கட்டாயமான பாடத்திட்டம், விருப்பப் பாடத்திட்டம் என்கிற முறையில் அமைத்திட வேண்டும்.