பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 285 சிந்தனைகளுடன் மெருகேற்றப்பட்டு, மக்களால் விரும்பிப் பங்குபெறும் வண்ணம் மாற்றி அமைக்கப்பட்டது. * இம்மாற்றத்திற்கு, 1964ம் ஆண்டு சிம்லா பகுதியில் உள்ளதாராதேவிஎனும் இடத்தில் நடைபெற்றக்கருத்தரங்கம் நன்கு உதவியது. ஏறத்தாழ 6 லட்சத்திற்குமேல் ஆரம்ப நாட்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் தொகை, ஒரே ஆண்டில் பத்து லட்சமாக மாறியது என்பது தான் வியக்கத்தகுமாற்றமாகும். இந்தத் திட்டத்தில் வயது வரம்பை ஏற்படுத்தி, வயதுக்கேற்றவாறு பிரித்தல் (Age group), தேர்வுகளில், தேவையானதைத் தெரிந்தெடுத்துக் கொள்வதற்காக வைக்கப்பட்ட நிகழ்ச்சிகளின் (Items) எண்ணிக்கையைக் குறைத்தல்; குறிப்பிட்டப் போட்டி நிகழ்ச்சிகளுக்கா குறிப்பிட்ட அளவினை (Standard) நிலையாக நிர்ணயித்தல்; எந்த நட்சத்திரப் பதக்கத்திற்குத் தாங்கள் போட்டியிடப் போகிறோம் என்பதை, முன் கூட்டியே தீர்மானித்தல் போன்ற மாற்றங்களை ஏற்படுத்தினார்கள். அதுவே அருமையான திட்டமாக அமைந்தது. இப்பொழுது, இந்தத்திட்டத்தின் பெயரை,தேசிய உடல் §pāşöälä fill-Lib (National Physical Fitness Programme) என்று மாற்றி அமைத்திருக்கின்றார்கள். எந்தத் திட்டமாவது ஏற்புடையதாக இருந்தாலும், எடுத்து நடத்துவோரின் திறமையில்தான் உண்டு என்பதற்கேற்ப, இப்பொழுதுகுவாலியரில் உள்ள லட்சுமிபாய் தேசிய உடற்கல்விக் கல்லூரியின் மேற்பார்வையில் இந்தத் திட்டம் எடுப்பாக செயல்பட்டுவருகிறது.