பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா போன்றவற்றில் பணியாற்றி, விளையாட்டுத்தரத்தை உயர்த்த முனைப்புடன் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். விளையாட்டுக்கள் மற்றும் ஓடுகளப் போட்டிகள் பற்றிய அனைத்துச் செய்திகளையும் அறிந்து கொள்ள இந்நிறுவனம் எல்லா வழிகளிலும் எல்லோருக்கும் உதவி வருகின்றது. தற்போது பெங்களூரிலும், கல்கத்தாவிலும் இதுபோன்ற பயிற்சி நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் எதிர்கால நோக்கங்கள், இந்தியாவின் தரத்தை உலக அளவில் உயர்த்திடவேண்டும், வெற்றி நிலையைப் பெற்று உயர்த்திட வேண்டும் என்பது தான். நல்ல நோக்கங்கள் நிறைவேற நாட்களாகும் என்பது உண்மையானால், நாமும் நம்பிக்கையுடன் காத்திருப்போம். விழுந்து போகாத முயற்சிகளுடன் வீரமுடன், விவேகமுடன், வேகமுடன் உழைத்திருப்போம். இந்தியர்களின் எதிர்பார்ப்பெல்லாம். அகில உலக அளவில் ஓர் உரிய உயர்ந்த இடத்தைப் பெற வேண்டும் என்பதுதான். மக்கள் தொகையில், இடப்பரப்பில், வசதியில், வளத்தில், வரலாற்றில் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக நாம் இருக்கிறோம். அந்த முன்னிலை விளையாட்டிலும் வரவேண்டும். என்பதை வருங்கால வரலாறு விரித்துரைக்க வேண்டும், வாழ்த்துரைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நமது எதிர்கால வரலாறு ஏற்றமிகு வரலாறாக அமைய இறைவன் எல்லா வளமைகளையும் திறமை களையும் வழங்குவாராக!