பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 3. உடற்கல்வியை உண்மையாக நம்பிய நாடுகள் பெற்ற பொலிவை. வலிமையை, அது ஏற்படுத்தித் தந்த ஏற்றமான நாகரிக வாழ்வைப் பற்றி விளங்கிக் கொள்ள. 4. உடற்கல்வியின் மகத்துவத்தை உலக நாடுகள் புரிந்து கொண்டு பின்பற்றியதற்கு, அந்தந்த நாடுகளில் அமைந்திருந்த தவிர்க்க முடியாத சூழ்நிலைகள்; பின் போகமுடியாத பிரச்சினைகள், இன்றியமையாத அவசியங்கள் என்னென்ன என்பதை வரலாறு நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக உணர்த்திக் காட்டுகிறது. 5. பின்பற்ற முடியாமல், உடற்கல்வியை ஒதுக்கிய நாடுகள் எல்லாம் பெற்ற பேரிழப்புகள், மீண்டு வரமுடியாத அளவு பெற்ற தோல்விகள், அவர்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாக அமைந்து போன கேவல நிலைகளையும் நம்மால் கண்டு கொண்டு, தவறுகளைத் தவிர்த்து வாழ உதவுகிறது. 6. இப்படிப்பட்ட உண்மை நிலையை பழுதறப் புரிந்து கொள்கிற பக்குவம் ஏற்பட்டு விடுகிறபோது. இனி வரும் எதிர் காலத்தில் நாம் எப்படி வாழ வேண்டும் என்கிற முன்னறிவை நமக்கு வழங்கி, முன்னேற்பாடாக பல திட்டங்களைக் தீட்டிகட்டுப்பாட்டுடன் பின்பற்றிக் கவனமாக வாழ்ந்து செல்லும் கருத்தையும், பொறுப்பையும் நமக்குக் கற்றுத்தந்து விடுகிறது. 7. அனுபவங்கள் தாம் நமது அறிவை வளர்த்துக் கொள்ள உதவுகின்றன. உற்சாகம் ஊட்டுகின்றன, உன்னிப்பாக காலத்தைக் கண்காணித்து, உண்மையாக வாழ உறுதுணையாக நிற்கின்றன.