பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

307

விளையாட்டு இலக்கியத்துறையில் முதல் முயற்சி

விளையாட்டு துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி. விளையாட்டுத் துறையில் கலைச் சொல் அகராதி. விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்.

விளையாட்டு ஆத்திச்சூடி (விளையாட்டின் மேன்மையை, சிறுவர்களுக்குச் சொல்லும் ஆத்திச்சூடி)

Quotations on Sports and games விளையாட்டு பற்றிய அறிஞர் பலரும் கூறிய கருத்துக் கோவை அடங்கியது.

திருக்குறள் புதிய உரை (அறத்துப்பால் மட்டும்) பகுதிக்கு உடல் நலம் பற்றிய நூல் எனும் கருத்துக்கள் அடங்கிய உரை எழுதியுள்ளார்.

பள்ளி மாணவர்களுக்காக ஆற்றிய பணிகள்

★6-ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உடல் நல உடற்கல்விப் பாடநூல்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் தமிழ் நாடு அரசு பாடத்திட்டத்திற்கு ஏற்ப எழுதி வெளியிட்டு தமிழ்நாட்டுப் பள்ளிக் கூடங்களில் விற்பனையாளராக வலம் வந்த வரலாறு நாம் அறிந்ததே.

★பல்வேறு பள்ளிகளின் மாணவ, மாணவியர் சாலை ஓட்டப் போட்டிகளை நடத்தி சான்றிதழும், பரிசுகளும் வழங்கியுள்ளார்.

★விளையாட்டு, உடல் நலம், உடற்கல்வியின் மேன்மையை அறிய, பள்ளி மாணவ மாணவியர்க்கு