பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

உடற் கல்விப் பாடத்தில் பொதுத் தேர்வுகளை உடற்கல்வி மாமன்றம் என்ற அமைப்பினை 1996 ஆம் ஆண்டு நிறுவி அதன்வழி தொடர்ந்து நடத்தி பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கியுள்ளார்.

பொதுமக்கள்

பொது மக்கள் பலரும் பயனடையும் வகையில், உடலழகுப் பயிற்சிப் பள்ளி, யோகாசனப் பயிற்சிப் பள்ளி முதலிய உடல்நலம் காக்கும் பள்ளிகளையும் நடத்தினார்.

பொதுமக்களின் நலன் கருதி அகில இந்திய நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினை நிறுவி விழிப்புணர்வினை ஏற்படுத்தினாார்.

விளையாட்டு மற்றும் உடற்கல்வித் துறைக்கு ஆற்றிய பணிகள்

உடற்கல்வி ஆசிரியர்களின் பணியைப் பாராட்டுகின்ற வகையில் சிறப்புற பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உடற்கல்விக்கு ஜீவனாகவும் மாணாக்கருக்கு ஜோதியாகவும் இருந்து நல்வழி காட்டுவதால் அவர்களுக்கு உடற்கல்வி ஜீவ ஜோதி என்னும் விருது வழங்கி பாராட்டிச்சான்றிதழும் வழங்கி வந்தார்.

சர்வதேச அளவில் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்கள் விளையாட்டுக்கள் வளர பாடுபட்டவர்களுக்கு உடற்கல்வி கலைமாமணி என்னும் விருது வழங்கி ஆண்டுக்கு ஒரு நபருக்கு சிறப்பு செய்து வந்தார்.