பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



விளையாட்டும் போட்டிகள்

ஒவ்வொரு குறுநாடும், தனக்கென்று ஒரு சில விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, மக்களை மகிழ்ச்சியுடன் ஈடுபடச் செய்தன. திருவிழா எடுக்கும் சமயத்தில், மக்களுக்கிடையே இசை, நடனம், விளையாட்டு போன்றவற்றில் போட்டிகளை ஏற்படுத்தி, உற்சாகப்படுத்தினர்.

அந்தந்த வட்டாரத்தில் நிகழ்ந்த விளையாட்டுப் போட்டிகளைத் தவிர, நாடு தழுவிய விளையாட்டுப் போட்டிகளும் மிகச்சிறப்பான முறிையல் நடந்தேறின.

நாடுகள் அனைத்திலிருந்தும் வந்து கலந்து கொண்டு போட்டியிட, நான்கு விதமான போட்டிகள் நடைபெற்றன அந்தத் தேசிய போட்டிகளான பேன்ஹெலனிக் விளையாட்டு விழாக்களின் பெயர்கள்.

1. ஒலிம்பியன் விளையாட்டு விழா
2. பிதியன் விளையாட்டு விழா
3. இஸ்த்மியான் விளையாட்டு விழா
4. நிமியன் விளையாட்டு விழா.

குறிப்பு: பேன் ஹெலனிக் விளையாட்டு விழாக்கள் என்றால், திருவிழா காலங்களில் நடைபெறுகின்ற விளையாட்டுப் போட்டிகள் என்பது அர்த்தமாகும். /. ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (The Olympian Games)

சீயஸ் என்ற தெய்வத்தைப் பெருமை படுத்துவதற்காக, ஒலிம்பியா என்ற இடத்தில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப் பெற்றது தான் ஒலிம்பிக் போட்டிகள் என்று அழைக்கப் பெற்றன.