பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தனிப்பட்டவரின் தனித்தன்மையே, பெரும் தத்துவமாக, பொதுக் கொள்கையாக உருவேறிவிட்டது. அதனால், தான், இந்தக் காலத்தைப் பொற்காலம் என்று போற்றினார்கள். அதாவது கொள்கைக் கோஷங்கள் கோலோச்சி, மக்களை திசை மாற்றி, தீவிர சிந்தனையாளர்களாகத் தேர்ச்சி பெறச்செய்தன.

சிந்தனையாளர்கள், தத்துவ வாதிகளின் பழமையான மரபுகளைப் பின்பற்றியவர்கள்; புதுமரபினை விளைத்த புதுச்சிந்தனையாளர்கள் என்று இருவகையாக இருந்தனர்.

பழைய மரபுகளே, வாழ்க்கை முறைகளில் தொடர வேண்டும். என்று அரிஸ்டோபன் (Aristophane): சீன போன் (Xenophone) எனும் அறிஞர்கள் அறிவுரை வழங்கினர்.

அவர்களின் ஆலோசனைகள், புதிய தத்துவமேதை களின் புயல்போன்ற பிரச்சாரங்களால் எடுபடாமற் போயின. அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், பிளாட்டோ, ஹிப்போகிராட்டிஸ் கேலன் போன்ற புதிய சிந்தனையாளர்கள் தோற்றுவித்த புதிய சிந்தனைகள்தாம், பொற்காலம் என்ற புகழைத் தேடித்தந்தன.

இவர்கள் கூறிய கருத்துக்களையும், சிந்தனைச் சிதறல்களையும் கீழே காண்போம்.

/. சினபோன்:

கிரேக்கத்தின் கீர்த்திமிக்க பழைய மரபுகளை இவர் பெரிதும் விரும்பினார். போற்றி மகிழந்தார். மற்றவர்களும் மரபுகெடாமல் பின்பற்றி வாழ வேண்டும் என்று வற்புறுத்தினார்.

இவரது எண்ணங்கள் போர்முறைகளையே வர வேற்றன.