பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

55



முறை போட்டியாளர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது.

4, தூய, சக்தியுள்ள, பொழுது போக்குப் போட்டியாளர் களாக விளங்கினால் மட்டும் போதாது. அவர்கள் எந்த விதமான கிரிமினல் வழக்குகளிலும் சம்பந்தப்படாதவராக இருக்கவேண்டும் அதாவது குற்றவாளிகள் யாரும், போட்டிகளில் பங்குபெற முடியாது.

இவ்வளவு விவரங்களையும் வீரர்களைப் பற்றி சேகரித்துத்திரட்டி பரிசீலித்து, போட்டியிடுவதற்கு அங்கீகாரம் அளிக்க கலே நாடிகை (Hello nodikai) என்ற குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. 10 பேர் அடங்கிய அந்தக் குழு இத்தகைய புனிதத்தைக் காப்பாற்றும் பணியாற்றும் கடமையை செய்தது. இவ்வளவு கடுமையான விதிகள் மூலமாக கட்டுப் படுத்தி, பத்துமாதம் பயிற்சி செய்தவர்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, மேலும் ஒரு மாதம் பயிற்சியானது, போட்டியை நடத்துபவர்களால் நடத்தப்பட்டது. அதிலே தேர்ந்தவர்கள் தாம்; போட்டிகளில் பங்குபெற அனுமதிக்கப்பட்டனர். so பந்தயங்கள் நடைபெற்றபோது 40 அடி உயரம் இருந்த சீயஸ் சிலையின் முன்புறத்தில், போட்டியாளர்கள்; அவர்களுக்குப் பயிற்சியளித் தவர்கள், பெற்றோர்கள், போட்டியாளர்களின் சகோதரர்கள் மற்றும் நடுவர்கள், அதிகாரிகள் அனைவரும் அணிவகுத்து நிற்பார்கள். சீயஸ் கடவுளை சபதத்தின் கடவுள் (God of Oaths) என்றும் அழைப்பார்கள். அவர்கள் அணிவகுத்துநின்ற பிறகு, சீயஸ் பீடத்தில் பன்றி ஒன்று பலியிடப்படும்.