பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

57



போட்டியில் பங்கு பெறலாம். எங்களுக்கு ஆட்சேபனை யில்லை என்பதாக அர்த்தம் ஆகும். இப்படியாக போட்டியாளர்களைப் பற்றிய தரத்தைக் காப்பதில், அவர்கள் அதிக அக்கறை செலுத்தியிருக் கின்றனர். இதற்குப் பிறகு விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கம் பற்றிய குறிப்புக்களை பொதுமக்களுக்கு அறிவிப்பாளர் அறிவிப்பதைத் தொடர்ந்து, முக்கியமான பெரிய மனிதர்களில் அல்லது தலைமை நடுவரில் ஒருவர் பேர்டியாளர்களுக்கு அறிவுரை வழங்கிட, போட்டிகள் தொடங்கப்பெறும். போட்டிகள் தொடங்க ஆரம்பித்த உடனேயே, புனிதத் தீ (Sacred Fire) ஒன்று ஏற்றுப்பெற்று, போட்டிகள் முடிவடையும் வரை எரிந்து கொண்டேயிருக்கும். அதன் பின்னரே, போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். போட்டி நிகழ்ச்சிகளும் - வளர்ச்சியும். ஆரம்பகால ஒலிம்பிக் பந்தயங்கள் ஒரு நாள் மட்டுமே நடந்தன. பின்னர், போட்டி நிகழ்ச்சிகளின் எண்ணிக்கைகள் பெருகிக்கொண்டே வரவர, போட்டி நடைபெறும் நாட்களின் எண்ணிக்கையும் வளர்ந்துகொண்டன. ஆரம்ப நாட்களில் 200 கெஜதுரம் ஓடுகிற (Stades) ஒட்டப்போட்டி மட்டுமே நடந்தது. அத்தகைய போட்டி ஒரு நாளிலே நடத்தி முடிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒட்டப் போட்டியுடன் தேரோட்டப்போட்டி, குதிரை சவாரிப் போட்டி, ஓட்டம், நீளத்தாண்டல், தட்டெறிதல், வேலெறிதல், மல்யுத்தம் போன்ற 5 போட்டி நிகழ்ச்சிகளைக் குறிக்கும் பென்டாதலான், குத்துச்சண்டை, மல்யுத்தம் மல்யுத்தமும் குத்துச்சண்டையும் கலந்து ஒரு கடுமையானபோட்டியை கொண்ட பங்கராஷியம் என்பன போன்ற போட்டிகள் சேர்ந்து கொண்டே வந்ததால், போட்டிநாட்களும் 5 நாட்கள் என்று மாறி வந்தன.