பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



3-ம் நாள் போட்டிகள், மிக உயர்ந்த பிரமாண்டமாய் அமையப்பெற்ற சீயஸ் கடவுள் சிலையின் பீடத்தில், முற்பகல் நேரத்தில் 100 காளைகளை பலியிட்டுத் துதித்தல்.

பிற்பகலில் போட்டிகள் ஆரம்பம், ஒட்டப்போட்டி, மல்யுத்தம், சிறு குத்துச்சண்டைப் போட்டிகள் அனைத்தும் சிறுவர்களுக்காக நடத்தப்பட்டன.

4-ம் நாள் போட்டிகள், ஆண்களுக்கான முக்கியமான போட்டிகள் நடைபெற்றன. ஒட்டப்பந்தயம்; துவந்த யுத்தம் (Dual Combat) போடுகிற நிகழ்ச்சிகளான குத்துச் சண்டை, மல்யுத்தம், பங்கராஷியம் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து இராணுவ உடையான போர்க்கால கவச உடைகளை அணிந்துகொண்டு ஓடுகிற ஒட்டப் போட்டிகள் நடந்தன.

5-ம் நாளில் போட்டிகள் நடைபெறவில்லை, கூடி யமர்ந்து குதூகலமாக உண்ணுகிற விருந்தும் கேளிக்கையுமாக நாள் கழிந்தது. இவ்வாறு 5 நாட்கள் போட்டியாக பந்தயங்கள் அமைந்து, போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் பரவசமூட்டின. பரபரப்பூட்டின.

பெண்களும் ஒலிம்பிக் பந்தயங்களும்

பெண்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதியில்லை. அவர்கள் பார்வையாளர்களாகவும் வந்து பார்த்து மகிழவும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. போட்டியிட்ட ஆண்கள் அனைவரும் பிறந்த மேனியராகப் பங்குபெற்றதும் ஒரு காரணம். மற்றக் காரணங்கள் முற் பகுதியிலே விளக்கப்பட்டிருப்பதைப்படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

பெண்கள் பந்தயக் களம் பக்கமே வரக் கூடாது என்பது கிரேக்க நாட்டுச் சட்டம். மறைக்கப்பட்ட பந்தயக் களத்தினை