பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



62

டாக்டர். எஸ். நவராஜ் செல்லைய



பின்னர், பெண்களும் ஆண்களுடன் போட்டி போட முடியும் என்று நிரூபித்து, சாரட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டதாக சரித்திரம் கூறுகிறது.

பரிசும் புகழும்:

ஒலிம்பிக்பந்தயத்தில் வெற்றி பெற்ற வீரன், மக்களால் பெரிதும் கெளரவிக்கப்பட்டான். அவன் பெற்ற புகழுக்கும் பரிசுக்கும் அளவே இல்லாமல் இருந்தது.

ஏழாவது ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்ற வரையில் வெற்றிவீரன் ஒருவன் மதிப்பிட முடியாத அளவுக்குப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டிருக்கிறான். விலை மதிக்கப்பட முடியாத பொருட்களைப் பரிசாக வழங்கி மக்களும் நாடும் பாராட்டி மகிழ்ந்தன.

அதற்குப் பிறகோ, ஒரு வெற்றி வீரனுக்குக் கிடைத்த பரிசு ஆலிவ் மலர் வளையம் தான். அதாவது புனித ஒலிம்பியா பகுதியிலே விளைந்த புனித ஆலிவ் மரங்களின் மலர்களும் இலைகளும் சேர்க்கப்பட்ட மலர் வளையமே, மாபெரும் வெற்றிப் பரிசாக வழங்கப்பட்டது. அதனை அதிகாரிகள் அரங்கத்திலேயே வழங்கினார்கள்.

புனித மலர் வளையத்தைப் பரிசாகப் பெற்ற வெற்றி வீரன், தனது தோழர்களாலும் நாட்டு மக்களாலும், மிக ஆடம்பரமாக தன் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டான். எல்லோரும் செல்லகின்ற மதிற்கூவரில் அமைந்த வாயிற் வழியாக அவனை அழைத்துச் செல்லாமல் மதிற் சுவரில் மற்றொரு புறத்தில் தனியாக வழியமைத்து, அதன் மூலம் நகரத்திற்கு வரவைத்து மேன்மைப்படுத்தினார்கள்.

அவன் ஆயுட்காலம் முழுவதும் ஆனந்தமாக வாழ்வதற்குரிய அளவுக்கு வசதிகளைப் படைத்துத் தந்தார்கள். பரிசுப் பொருட்களை வாரி வழங்கினார்கள். ஒரு