பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


________________

சாற்றலும், சிறந்த டாக்டர். எஸ். நவராஜ் செல்லை 66 சந்திக்கின்ற அதிகார வசதியும்; மற்றவர்கள் தேன் செயல்படத் தூண்டுகிற பிடிப்பான பேச்சாற்றலும் . கல்வியாளராகவும் திகழ்ந்த பிரபு பியர்டி கூபர் டின் - பிரெஞ்சுக்காரர், புதிய ஒலிம்பிக் பந்தயங்களை மீண்டு கொண்டு வந்து விட வேண்டும் என்று பேராசையில் லயித்திருந்தார். உலக நாடுகள் ஒற்றுமைக்கும், சகோதரத்துவ வளர்ச்சிக்கும், சமாதான முயற்சிக்கும் ஒலிம்பிக் பந்தயங்கவே உற்றதுணை என்று அவர் உறுதியாக நம்பிய கொள்கையை தெளிவாக உலக நாட்டினர்க்கு எடுத்து உரைத்த பாங்கிலே. எல்லோரும் ஏற்றுக் கொண்டனர். இதன் பயனாக 1896ம் ஆண்டு, கிரேக்க நாட்டிலே ஏதென்ஸ் நகரத்திலே, ஏப்ரல் 165 தேதி, முதன் முதலாக புதிய ஒலிம்பிக் பந்தயங்கள் நடத்தப்பட்டன. இதற்காக இவாஞ்சலிஸ் ஸப்பாஸ் அளித்த மிகுந்த தொகையுடன், கிரேக்க அரசும் 2% லட்சம் டிராச்மா (Drachme) பணத்தை அளித்தது. அத்துடன், தாய் நாட்டுப் பற்றுமிக்க ஜார்ஸ் அவராப் (George Averoff) என்ற சிறந்த வணிகரும், பல மில்லியன் தொகையை அளிக்க பான் எதெனிக் ஸ்டேடியம் என்ற அரங்கம் உருவானது. ஒன்பது நாடுகள் பங்கு பெற்றன. 59 வீரர்கள் போட்டியிட்டனர் என்றாலும், இன்று 150 நாடுகளுக்கு மேல் வந்து கலந்து கொண்டு போட்டியிடுகிற அளவுக்கு, புதிய ஒலிம்பிக் பந்தயம் பெருமை பெற்று, வளர்ந்து வந்திருக்கிறது. இனி, புதிய ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்ற ஆண்டு, நடைபெற்ற இடம் எங்கெங்கே என்பதைக் காண்போம். 24 முறைகளில் 3 தடவைகள் ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெறவில்லை . முதல் உலகப் போர் 1916ம் ஆண்டு நடைபெற்ற போதும்; இரண்டாம் உலகப் போர் 1940 முதல்