பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

 71


பின்னர் ஒலிம்பிக் கமிட்டி ஓரிடத்தில் கூடி, விண்ணப் பித்த நாட்டினரைத் தவிர, மற்ற உறுப்பினர்களுடன் ஒன்று கலந்து, சீட்டுத் தேர்வு மூலம் (Ballet) தேர்வுசெய்யும். இப்படி தேர்வு செய்கின்ற முறையானது, ஒரு நாட்டிற்கு 6 வருடங்களுக்கு முன்னதாகவே அறிவித்துவிடவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பந்தயங்களை நடத்த இருக்கும் நாடு என்றுதேர்ந் தெடுக்கப்படுவது மறைமுகத் தேர்வு (Ballet) மூலமே, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிற வாய்ப்பு பெற்ற (நாட்டின்) நகரத்திற்கு, அதாவது அந்நகர மேயருக்கு முதலில் செய்தி அனுப்பப்படுகிறது. மேயரானவர் அந்த செய்தியை, தேசிய ஒலிம்பிக் கழகத்திற்கு உடனே தெரியப்படுத்துகிறார். செய்தியை பெற்ற அந்தக் கழகம், தங்களது ஆயத்தப் பணிகளைத் தொடங்கி, பந்தயங்களை நடத்துகின்ற பொறுப்பேற்கும் பற்பல காரியங்களைத் தொடர்ந்து மேற்கொள்கிறது.

ஒலிம்பிக்போட்டி நிகழ்ச்சிகள்: (Evants)

ஒலிம்பிக் போட்டிகளில் நடைபெற இருக்கும் போட்டி நிகழ்ச்சிகளை பொறுப்பேற்கும் அந்த நாட்டின் தேசிய ஒலிம்பிக் கழகத்தின் செயலாக்கக் குழு (Organising Committee) நிர்ணயித்தாலும், அவை, அகில உலக ஒலிம்பிக் கழகத்தினரின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.

பொதுவாக ஒலிம்பிக் போட்டிகளில் உள்ள நிகழ்ச்சிகள்.

1. ஒடுக்ளப் போட்டிகள் 10. சைக்கிள் போட்டிகள்

2. ஜிம்னாஸ்டிக்ஸ் 11. எடைத் தூக்கும் போட்டிகள்