பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



3. குத்துச் சண்டை 12. சிறுபடகுப் போட்டி

4. கத்திச் சண்டை 13. கால்பந்தாட்டம்

5. மல்யுத்தப் போட்டி 14. தண்ணீர் பந்தாட்டப் போட்டிகள்

6. துப்பாக்கிச் சுடுதல் 15. வளைகோல்பந்தாட்டம்

7. படகு செலுத்தும் போட்டிகள் 16. கூடைப் பந்தாட்டம்

8. நீச்சல் போட்டிகள் 17. கைப்பந்தாட்டம்
9. குதிரைப் யேற்றப் போட்டிகள் 18. கையெறிப் பந்தாட்டம்

அந்தந்த நாட்டின் கோரிக்கைபடி புதிய விளையாட்டுக்களும், இருந்தால் விதிமுறைகளுக்குட்பட்டு போட்டிகளில் ஒன்றாக இடம் பெறும் வரலாறும் இருக்கிறது.

பந்தயங்கள் துவக்க விழா

எந்த நாட்டில் பந்தயங்கள் நடக்கின்றனவோ, அந்த நாட்டின் குடியரசுத் தலைவர் அல்லது அரசர் அல்லது வேறு எந்த முறையிலாவது ஆட்சி செய்யும் தலைவராக இருக்கிறவர், விழாவின் தலைவராக இருந்து, விழாவினைத் துவக்கி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

விழாவிற்கு வருகைதந்திருக்கும் உலக ஒலிம்பிக் கழகத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அந்த நாட்டின் தேசிய ஒலிம்பிக் கழகத் தலைவர் மற்றும் அமைப்புக் குழு உறுப்பினர்கள் அனைவரும், விழாத் தலைவருக்கு அறிமுகப் படுத்தி வைக்கப்படுகின்றார்கள்.

விழாத்தலைவர் மேடைக்கு அழைக்கப்பெற்று கெளரவிக்கப்பட்ட பின்னர், அந்த நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.